இந்துக்களின் தொன்ம நம்பிக்கையின்படி ஏழு புனித நகரங்கள் முக்தி தர வல்லவைகள் எனப்படுகின்றன. இதனை வடமொழியில் சப்த மோட்ச புரிகள் என்றழைக்கின்றனர். புரி எனும் சமசுகிருத மொழிச் சொல்லிற்கு நகரம் என்று பொருள். இந்தியாவிலிருக்கும் இந்த ஏழு புனித நகரங்களில் உள்ள புனித நீரில் நீராடினால் முக்தி கிடைக்கும் என்பது இந்து சமயத்தினரின் நம்பிக்கையாக இருக்கிறது. அவை;
1. வாரணாசி - உத்திரப்பிரதேச மாநிலத்தில் வாரணாசி நகரம் இருக்கிறது.
2. அயோத்தி - உத்தரப் பிரதேசம் மாநிலத்தில், அயோத்தி நகரம் இருக்கிறது.
3. காஞ்சிபுரம் - தமிழ்நாடு மாநிலத்தில் காஞ்சிபுரம் நகரம் இருக்கிறது.
4. மதுரா - உத்திரப்பிரதேச மாநிலத்தில் மதுரா நகரம் இருக்கிறது.
5. துவாரகை - குசராத்து மாநிலத்தில் துவாரகை நகரம் இருக்கிறது.
6. உஜ்ஜயினி - மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் உஜ்ஜயினி நகரம் இருக்கிறது.
7. ஹரித்துவார் - உத்தரகண்ட் மாநிலத்தில் ஹரித்துவார் நகரம் இருக்கிறது.