மார்கழி மாதம் அதிகாலையில் குளிர் அதிகமாக இருக்கும். இந்த மாதமானது ஒவ்வொருவருக்கும் சிறப்பான மாதமாகவே அமைகிறது. இந்த மாதத்தில், மனித உடலின் சமநிலையையும், ஸ்திரத் தன்மையையும் கொண்டு வருவதற்கு உகந்த நேரமாக அமைகிறது. இம்மாதத்தில் எதைச் செய்யக் கூடாது? எதைச் செய்ய வேண்டும்? என்று சொல்லப்பட்டிருக்கின்றன.
செய்யக் கூடாதது
* மார்கழி மாதத்தில் பொதுவாக விதை விதைக்கக் கூடாது எனக் கூறுவர். ஏனெனில், இந்த மிகுந்த குளிர்ச்சியான மாதத்தில் விதைக்கக் கூடிய விதைகள் விரைவாக வளராது எனக் கூறுவர். அதாவது, விதை விதைக்கும் போது, விதை சரியான உயிர்த் தன்மை பெற்று வளராமல் போய் விடும் என்பதாலேயே விதை விதைக்கக் கூடாது எனக் கூறுவர். இந்தக் காரணத்தால் தான் மார்கழி மாதத்தில் திருமணம் நடத்தக் கூடாது எனக் கூறப்படுகிறது.
* மார்கழி மாதத்தில் அதிகாலை நேரம் தூங்கக் கூடாது. அதாவது, சூரிய உதயத்திற்கு முன்பு எழுவது. ஆனால், பொதுவாகவே மார்கழி மாதத்தில் பிரம்மமுகூர்த்தம் நடைபெறும் வேளையிலேயே தூங்கக் கூடாது. அதன் படி 4.30 மணிக்கு எழுந்து குளிக்க வேண்டிய மாதம் மார்கழி மாதம். ஏனெனில், அந்த நேரத்தில் இயற்கையில் இருந்து நமக்குக் கிடைக்க கூடிய அதீதமான ஆக்ஸிஜன் மிகுந்த சக்தி, இந்த உடலுக்கு ஆண்டு முழுக்க தேவையான நலனைத் தரும்.
* மார்கழி மாதத்தில் இரவிலேயேக் கோலம் போடக் கூடாது. கோலம் என்பது வெறும் அழகுக்காக மட்டும் போடுவதல்ல. அது ஒரு தர்மத்திற்காக இட வேண்டியதாகும். காலையில் எழுந்த பிறகே வாசல் தெளித்து கோலம் இட வேண்டும்.
செய்ய வேண்டியது
* நீங்கள் இருக்கும் இடத்தில் பஜனை செய்தால், அதில் கட்டாம் கலந்து கொள்ள வேண்டும். பஜனையில் சென்று இறைவனின் நாமத்தை உச்சரிக்க வேண்டும்.
* தாங்கள் பின்பற்றும் சைவ அல்லது வைணவ வழிபாட்டு முறைகளுக்கேற்ப மாணிக்கவாசகரின் திருவெம்பாவை (சைவம்), ஆண்டாளின் திருப்பாவை (வைணவம்) கட்டாயம் படிக்க வேண்டும். (வைணவர்கள் புண்ணியங்கள் கிடைக்க நாச்சியாரின் பாசுரங்களையும் மார்கழி மாதத்தில் சேர்த்துப் பாடுவதுண்டு)
வைகுண்ட ஏகாதசி (வைணவம்), ஆருத்ரா தரிசனம் (சைவம்) எனும் சிறப்பு மிக்க திருநாட்களைக் கொண்ட பக்தி மிகுந்த மாதம்.
புத்துணர்ச்சி மிகுந்த மார்கழி மாதத்தில் அதிகாலையில் எழுந்து இறைவனின் அடிவணங்கி வழிபாட்டு செய்பவர்களின் பாவங்கள் விலகி புண்ணியங்கள் கிடைக்கும்.