இறைவன் சிவபெருமானுடைய திருமேனிகளை "மாகேசுவர மூர்த்திகள்" என்பர். இவை இருபத்தைந்து எனவும் கூறுவர்.
1. சேயிடைச் செல்வர் (சோமாஸ்கந்தர்)
2. ஆடல்வல்லான் (நடராசர்)
3. விடைப்பெருமான் (இடபாரூடர்)
4. மணவழகர் (கலியாண சுந்தரர்)
5. பிறைமுடிப்பெருமான் (சந்திர சேகரர்)
6. இரந்துண்ணியார் (பிட்சாடனர்)
7. காமனை வென்ற கண்ணுதற் கடவுள் (காமதகனர்)
8. காலகாலர் (காலாந்தகர்)
9. சலந்தரனைப் பிளந்தார் (சலந்தரவதர்)
10. முப்புரம் எரித்தார் (திரிபுராந்தகர்)
11. யானை உரிபோர்த்தார் (கசசம்காரர்)
12. வீரபத்திரர்
13. தென்முகப்பரமன் (தட்சிணாமூர்த்தி)
14. கானவேடர்திருவடிவு (கிராதமூர்த்தி)
15. திருநீலகண்டர்
16. கங்காளர்
17. சுடராழி ஈந்தோன் (சக்ரதானமூர்த்தி)
18. யானை முகனுக்கருள் செய்தோன் (கசமுக அனுக்கிரகர்)
19. சண்டீசருக்கு அருள் செய்தோன்
20. ஒற்றைக்காற் பெருமான் (ஏகபாதமூர்த்தி)
21. இலிங்கத்தே தோன்றியவர் (லிங்கோத்பவர்)
22. நல்லிருக்கை நாதர் (சுகாசனர்)
23. அம்மையப்பர் (உமாசகிதர்)
24. மாலொருபாகர் (அரிஅத்தர்)
25. உமையொருபாகர் (அர்த்தநாரீசுவரர்)
இவை போக, சரபமூர்த்தி, திரிபாதமூர்த்தி, பயிரவர் முதலிய பல மூர்த்திகளும் மாகேசுவர மூர்த்திகள் எனப்படுகின்றன.