கல் நாதஸ்வரம்
உ. தாமரைச்செல்வி
திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் வழியில் உள்ள ஆழ்வார்திருநகரி (தூத்துக்குடி மாவட்டம்) எனும் ஊரில் அமைந்திருக்கும் ஆதிநாதப் பெருமாள் கோயிலில் 350 ஆண்டுகள் பழமை வாய்ந்த கல் நாதஸ்வரம் உள்ளது. முன்னர் இந்தப் பகுதியை ஆட்சி செய்த கிருஷ்ணப்ப நாயக்கர் காலத்தில், இந்தக் கல் நாதஸ்வரம் இந்தக் கோவிலுக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த கோயிலில் நடைபெறும் விழாக்களில் இசைக்கப்பட்ட இந்த கல் நாதஸ்வரம், தற்போது அதன் பழமையைப் பாதுகாக்கும் பொருட்டு மரப்பெட்டிக்குள் வைத்துப் பூட்டிப் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.