1. செல்வச் செழிப்பு பெறுவதற்கு தங்கம் நிரம்பிய குடம் அல்லது தெய்வீகம் நிறைந்த பொருட்களுடன் கும்பம் வைத்து வழிபட வேண்டும்.
2. கல்வி மற்றும் சுபிட்ச வாழ்வு பெறுவதற்கு பட்டு சார்த்துதல், தானியம் மற்றும் திவ்ய ஆபரணங்கள் வழங்க வேண்டும்.
3. உடல் நலம் பெறுவதற்கு உப்பு காணிக்கை செலுத்த வேண்டும்.
4. விஷத்தன்மை நீங்குவதற்கு மஞ்சள் காணிக்கை செலுத்த வேண்டும்.
5. ஆரோக்கிய வாழ்வுக்கு நல்ல மிளகு, கடுகு, சிறு பயிறு போன்றவற்றை நைவேத்தியமாகச் செலுத்த வெண்டும்.
6. சர்ப்ப தோஷப் பரிகாரத்திற்கு தங்கத்தில் செய்யப்பட்ட புற்று, நாகத்தின் முட்டை, மரம், பூமி போன்ற வடிவங்கள் வாங்கி சமர்ப்பிக்க வேண்டும்.
7. நீண்ட ஆயுள் பெறுவதற்கு நெய் காணிக்கை செலுத்த வேண்டும்.
8. நினைத்த காரியம் கை கூடுவதற்குப் பால், கதலிப்பழம், நிலவறை பாயாசம் நைவேத்தியம் படைக்க வேண்டும்.
9. குழந்தைப் பெறு பெறுவதற்கு மஞ்சள் பொடி, பால் நைவேத்தியம் படைக்க வேண்டும்.
10. மரங்களின் செழிப்புக்கு மரங்களில் இருந்து கிடைக்கும் காய்கள், கிழங்குகள் உள்ளிட்டவைகளைச் சமர்ப்பிக்க வேண்டும்.
11. நாக தோஷப் பரிகாரத்திற்கு மஞ்சள் பொடி காணிக்கை, பால், பழம், பால் பாயாசம், அப்பம், இளநீர், பூக்கள், அவல் நைவேத்தியம் படைக்க வேண்டும்.