உத்ஸவம் (உத்-ஸவம்) என்பது சிருஷ்டி மார்க்கத்தைக் குறிப்பதாகும். உத் என்றால் சப்த பாஷிதம்; ஸவம் என்றால் சிருஷ்டி, அதாவது நன்மைகள் விருத்தியாகவே கோவிலில் உத்ஸவங்கள் நடத்தப்படுகின்றன.
உத்ஸவங்கள் நடத்தாவிடில் மன்னனுக்கும் (ஆள்வோருக்கும்) நாட்டுக்கும் (குடிமக்கள்) கேடு விளையுமென ஞானேத்திரம் என்ற உபாகமம் கூறுகிறது. இயற்கை உத்பாதம், கிரகபீடை, மக்களுக்கு வியாதிகளால் ஆயுள் குறைதல் போன்ற கெடுதல்கள் ஏற்படலாம்.
உத்ஸவங்களில் ஆறு வகைகள் உண்டு. அவை;
1. பைத்ருகம் (பன்னிரண்டு நாள்கள்)
2. சௌக்யம் (ஒன்பது நாள்கள்)
3. ஸ்ரீகரம் (ஏழு நாள்கள்)
4. பார்த்திபம் (ஐந்து நாள்கள்)
5. சாத்விகம் (மூன்று நாள்கள்)
6. சைவம் (ஒரு நாள்)
ஒன்பது நாள்களுக்கு மேல் நடக்கும் உத்ஸவங்களுக்கே பிரம்மோத்ஸவம் என்று பெயர்.
யோகஜ ஆகமப்படி நடத்தினால்,
1. கௌமாரம் (பதிமூன்று நாள்கள்)
2. சரவித்ரம் (பதினைந்து நாள்கள்)
3. சாந்த்ரம் (பதினேழு நாள்கள்)
பதினேழு நாள்களுக்கு மேல் ஒரே சமயத்தில் உத்ஸவம் நடத்தக்கூடாது.