வெள்ளி விரதம்
வைகாசி வளர்பிறை முதல் வெள்ளிக்கிழமை தொடங்கி ஒரு வருடம் செய்வது வெள்ளிக்கிழமை விரதம். அனைத்து நற்பலன்களும் கிட்டும்.
செவ்வாய் விரதம்
ஆடிச் செவ்வாய் தொடங்கி ஒவ்வொரு செவ்வாயும் ஓராண்டு வரை செய்வது செவ்வாய் தோஷம் விலகிவிடும்.
சதுர்த்தி விரதம்
பிரதி மாதம் சதுர்த்தி அன்று இருப்பது காரியத்தடைகள் நீங்கும்.
குமாரசஷ்டி விரதம்
கார்த்திகை மாத தேய்பிறை பிரதமை திதி அன்று தொடங்கி மார்கழி வரை பிறை சஷ்டி வரை 21 தினங்கள் செய்வர். 21 இலைகள் உடைய மஞ்சள் நூலை கையில் கட்டிக்கொள்வர். பிள்ளை செல்வம் குடும்ப வளத்திற்காக செய்யப்படுகின்ற இந்த விரத்திற்குப் பிள்ளையார் நோன்பு என்ற பெயர் உண்டு.
தூர்வா கணபதி விரதம்
கார்த்திகை மாத வளர்பிறை சதுர்த்தி அன்று விநாயகரை அருகம்புல் ஆசனத்தில் அமர்த்தி செய்வது வம்சவிருத்தி ஏற்படும்.
சித்தி விநாயக விரதம்
புரட்டாசி வளர்பிறை 14-ம் திதியான சதுர்தகி திதியில் விரதம் இருப்பது எதிரிகள் விலகுவர்.
தூர்வாஷ்டமி விரதம்
புரட்டாசி வளர்பிறை அஷ்டமி அன்று தொடங்கி விநாயகரை 1 ஆண்டு அருகம்புல்லால் அர்ச்சித்து வருவது உடல் வலிமை உண்டாகும்.