சிவன் கோயிலுக்குச் சென்று இறைவனை வழிபட்டுத் திரும்பும் முன்பாக, கோயிலில் சிறிது நேரம் அமர்ந்து வர வேண்டும் என்கிறார்கள். விஷ்ணு கோயிலுக்குச் சென்று இறைவனை வழிபட்டுத் திரும்பும் போது நேராக வீட்டிற்கு வந்துவிட வேண்டும் என்கிறார்கள். இரண்டில் எதைப் பின்பற்றுவது?
சிவன் கோயிலுக்குச் சென்று வழிபட்டு வீடு திரும்பும் போது வழியில் ஏதேனும் இடையூறு ஏற்படாமல் இருக்கப் பூதகணங்களை இறைவன் நம்மோடு துணைக்கு அனுப்புகிறார். அதனால் நாமும் சிறிதுநேரம் கோயிலில் உட்கார்ந்து இறைவனிடத்தில் மகிழ்ச்சியைத் தெரிவித்துவிட்டுக் கிளம்புகிறோம்.
விஷ்ணு கோயிலுக்குச் சென்று வழிபட்டு வீடு திரும்பும் போது இறைவியான மகாலட்சுமி நம்மோடு வீட்டிற்கு வருகிறாள். அதனால், கோயிலில் உட்காராமாலும், வேறு எங்கும் செல்லாமலும் நேராக வீட்டிற்கு வந்தால் செல்வத்தின் அதிபதியான மகாலட்சுமியின் மூலம் செல்வம் நேராக வீட்டுக்கு வந்து சேரும்
எனவே மேற்காணும் இரு முறைகளையும் பின்பற்றிப் பயனடையலாம்.