இந்துக் கோவில்களில் பலிபீடத்திற்கு அருகே அமைக்கப் பெறுகின்ற கொடியேற்றுகின்ற மரத்தினைக் கொடிமரம் என்கின்றனர். இதனை சமஸ்கிருதத்தில் ‘துவஜஸ்தம்பம்’ என்றழைக்கின்றனர். கொடிமரத்தின் அடிப்பகுதியான சதுரம், அதற்கு மேல் எண்கோணவேதி அமைப்பு மற்றும் தடித்த உருளை பாகம் என இந்துக் கோவில் கொடிமரம் மூன்று பாகங்களைக் கொண்டது. இதில் சதுரப்பகுதி பிரம்மாவினையும், எண்கோணவேதி அமைப்பு திருமாலையும், உருளையமைப்பு சிவனையும் குறிப்பதாகச் சொல்லப்படுவதுண்டு.
இறைவனுக்கு ஏற்றப்பட வேண்டிய கொடியின் சின்னம் குறித்து சூரியப்புராணத்தில் கூறப்பட்டுள்ளது. அவை;
1. சிவபெருமான் - நந்திக் கொடி
2. திருமால் - கருடக் கொடி
3. சூரிய தேவன் - வியோமாக் கொடி
4. வருண தேவன் - அன்னக் கொடி
5. குபேரன் - நரன் கொடி
6. முருகன் - சேவல் கொடி
7. விநாயகர் - மூசிக கொடி
8. இந்திரன் - யானைக் கொடி
9. யமன் - எருமைக் கொடி
10. துர்க்கை - சிம்மக் கொடி
11. சனி பகவான் - காக்கைக் கொடி
12. அருச்சுனன் - அனுமன் கொடி
(துர்க்கை உள்ளிட்ட அனைத்து அம்மனுக்கும் சிம்மக் கொடி ஏற்றப்படுகிறது)