இந்து சமய ஆன்மக் கொள்கைகள் ஒன்பதாக வகைப்படுத்தப்படுகிறது. அவை;
1. மனமே ஆன்மா - இக்கொள்கை உடையவர் அந்தக்கரண ஆன்மவாதி.
2. ஆன்மா ஒன்றே - இக்கொள்கை உடையவர் ஏகான்மவாதி.
3. இந்திரியமே (பொறி) ஆன்மா - இக்கொள்கை உடையவர் இந்திரியான்மாவாதி.
4. ஆன்மாவிற்கு உற்பத்தி உண்டு - இக்கொள்கை உடையவர் உற்பத்திவாதி.
5. சூனியமே (இன்மை) ஆன்மா - இக்கொள்கை உடையவர் சூனிய ஆன்மவாதி.
6. உயிர்வளியே ஆன்மா - இக்கொள்கை உடையவர் பிராணான்மாவாதி.
7. விஞ்ஞானமே ஆன்மா - இக்கொள்கை யோகசாரன் கொள்கை.
8. ஆன்மா சடப் பொருள் - இக்கொள்கை வைசேடிகர் கொள்கை.
9. ஆன்மா ஆனந்தமடைவதே முத்தி - இக்கொள்கை உடையவர் ஆனந்த ஆன்மவாதி.