வைணவ திவ்விய தேசங்கள் 108. இவை யாவும் ஆழ்வார் பாசுரங்களால் மங்களாசாசனம் பெற்றவை. சைவர்கள் ஒரு பதிகம் முழுவதும் ஒரு திருத்தலத்தைப்பற்றி இருந்தால்தான் அதனைப் பாடல் பெற்ற தலம் எனக் குறிப்பிடுவர். ஏதாவது, ஒரு பாடலில் தலங்களில் பெயர்கள் அமைந்தால் அவற்றை 'வைப்புத் தலங்கள்' என்று தனியாகப் பிரித்துக் காட்டுவர். ஆனால், வைணவர்கள் பாசுரங்களில் திருத்தலங்களின் பெயர்கள் அமைந்த நிலையிலேயே அவற்றை மங்களாசாசனம் பெற்ற தலங்களாகக் கொள்வர்.
சோணாட்டுத் திருப்பதிகள் - 40
1. திருவரங்கம்
2. திருஉறையூர்
3. திருத்தஞ்சை
4. திருஅன்பில்
5. திருக்கரம்பனூர்
6. திருவெள்ளறை
7. திருப்புள்ளம் பூதங்குடி
8. திருப்பேர்நகர்
9. திரு ஆதனூர்
10. திருவழுந்தூர்
11. திருச்சிறுபுலியூர்
12. திருச்சேறை
13. திருத் தலைச்சங்க நாண் மதியம்
14. திருக்குடந்தை
15. திருக்கண்டியூர்
16. திருவிண்ணகர்
17. திருக்கண்ணபுரம்
18. திருவாலி
19. திருநாகை
20. திருநறையூர்
21. திருநந்திபுர விண்ணகரம்
22. திருவிந்தளூர்
23. திருச்சித்ரகூடம்
24. திருக்காழிச்சீராம விண்ணகரம்
25. திருக்கூடலுர்
26. திருக்கண்ணங்குடி
27. திருக்கண்ணமங்கை
28. திருக்கவித்தலம்
29. திருவெள்ளியங்குடி
30. திருமணிமாடக்கோயில்
31. திருவைகுந்த விண்ணகரம்
32. திருஅரிமேய விண்ணகரம்
33. திருத்தேவனார்தொகை
34. திருவண்புருடோத்தமம்
35. திருச்செம்பொன்செய்கோயில்
36. திருத்தெற்றியம்பலம்
37. திருமணிக்கூடம்
38. திருக்காவளம்பாடி
39. திருவெள்ளக்குளம்
40. திருபார்த்தன் பள்ளி
(30 முதல் 40 (11 திருப்பதிகள்) "திருநாங்கூர்த் திருப்பதிகள்” என வழங்கப்பெறும்)
பாண்டிநாட்டுத் திருப்பதிகள் – 18
1. திருமாலிருஞ்சோலைமலை
2. திருக்கோட்டியூர்
3. திருமெய்யம்
4. திருப்புல்லாணி
5. திருத்தண்கால்
6. திருமோகூர்
7. திருக்கூடல்
8. ஸ்ரீவில்லிபுத்தூர்
9. திருக்குருகூர்
10. திருத்தொலைவில்லி மங்கலம்
11. சிரீவரமங்கை
12. திருப்புளிங்குடி
13. தென்திருப்பேரை
14. ஸ்ரீவைகுண்டம்
15. திருவரகுணமங்கை
16. திருக்குளந்தை
17. திருக்குறுங்குடி
18. திருக்கோளுர்
(நவதிருப்பதிகள்: திருக்குருகூர் (9), திருக்கோளுர் (18), தென்திருப்பேரை (12) ஆகிய மூன்றும் பொருநையாற்றின் தென்கரையில் இருப்பவை. ஸ்ரீவைகுண்டம் (3) வரகுணமங்கை (15) திருக்குளந்தை (16) திருப்புளியங்குடி (14) தொலைவில்லி மங்கலம் (10) இது - இரட்டைத் திருப்பதி - ஆகிய ஐந்தும் பொருநையாற்றின் வடகரையில் உள்ளவை. தொலைவில்லி மங்கலம் 18 - கணக்கில் ஒன்றாகவும் நவதிருப்பதி கணக்கில் இரண்டாகவும் கருதப்பெறும்)
மலை நாட்டுத் திருப்பதிகள் - 13
1. திருவநந்தபுரம்
2. திருவண்பரிசாரம்
3. திருக்காட்கரை
4. திருமூழிக்களம்
5. திருப்புலியூர்குட்டநாடு
6. திருச்செங்குன்றுார்
7. திருநாவாய்
8. திருவல்லவாழ்
9. திருவண்வண்டூர்
10. திருவாட்டாறு
11. திருவித்துவக் கோடு
12. திருக்கடித்தானம்
13. திருவாறன்விளை
நடுநாட்டுத் திருப்பதிகள் - 2
1. திருவயிந்திரபுரம்
2. திருக்கோவலூர்
தொண்டை நாட்டுத் திருப்பதிகள் - 22
1. திருக்கச்சி- அத்திகிரி
2. திரு அட்டபுயகரம்
3. திருத்தண்கா
4. திருவேளுக்கை
5. திருபாடகம்
6. திரு நீரகம்
7. திருநிலாத்திங்கள்துண்டம்
8. திருவூரகம்
9. திருவெஃகா
10. திருக்காரகம்
11. திருக்கார்வானம்
12. திருக்கள்வனூர்
13. திருப்பவளவண்ணம்
14. திருப்பரமேச்சுரவிண்ணகரம்
15. திருப்புட்குழி
16. திருநின்றவூர்
17. திருவெவ்வுள்
18. திருநீர்மலை
19. திருஇட எந்தை
20. திருக்கடல் மல்லை
21. திருஅல்லிக்கேணி
22. திருக்கடிகை
வடநாட்டுத் திருப்பதிகள் -12
1. திருவேங்கடம்
2. திருச்சிங்கவேழ்குன்றம்
3. திரு அயோத்தி
4. திருநைமிசாரண்யம்
5. திருச்சாளகிராமம்
6. திருவதரியாச்சிரமம்
7. திருக்கண்டங்கடிநகர்
8. திருப்பிரிதி
9. திருத்துவாரகை
10. திருவடமதுரை
11. திருவாய்ப்பாடி
12. திருப்பாற்கடல்
திருநாட்டுத்திருப்பதி - 1
1. திருநாடு (வைகுந்தம் - பரமபதம்)