வாத்சாயனர் தனது நியாய சூத்திர பாஷ்யத்தில் மூன்றுவகை தர்மங்களைக் குறிப்பிடுகிறார்.
1. உடல் தர்மம் (உடலால் ஆற்ற வேண்டிய அறம்)
அ. தானம் - தேவைப்படுவோருக்கு தானம் தருதல்
ஆ. துயர்துடைப்பு - துன்பப்படுபவர்களுக்கு உதவி செய்து அவர்களின் கண்ணீரைத் துடைத்தல்
இ. சேவை - சக மக்களுக்கும், உலக உயிர்களுக்கும் சேவை செய்தல்
2. மன தர்மம் (மனத்தால் கடைப்பிடிக்க வேண்டிய அறம்)
அ. கருணை - உயிர்களிடம் கருணை கொள்தல்
ஆ. திருப்தி - தன்னிடம் இருப்பதைக் கொண்டு மனநிறைவு கொள்தல்
இ. இறைநம்பிக்கை - இறைவனைப் பற்றிய நம்பிக்கை மனதில் நிலைத்திருத்தல்
3. வாக்கு தர்மம் (வாய்ச்சொற்களால் கடைப்பிடிக்க வேண்டிய அறம்)
அ. உண்மை - ஒன்றைப் பற்றித் தீர விசாரித்து மெய்யென அறிந்த பின் பேசுதல்
ஆ. இனிமை - கசப்பான கடுஞ்சொற்களைத் தவிர்த்துவிட்டு, இனிய சொற்களைப் பேசுதல்
இ. பணிவு - எல்லோரிடமும் மரியாதையுடன், பணிவாகப் பேசுதல