* சிவன் ஒருவனே எல்லார்க்கும் தலைவன்.
* சிவனோடு ஒக்கும் தெய்வம் தேடியும் இல்லை.
* நான்முகன், திருமால், சிவன் ஆகிய மூவரும் ஒருவரே ஆவர்.
* சிவன் ஆகமப் பொருளை நந்திக்கு உபதேசித்தார். நந்தியம் பெருமான் சனற்குமாரர் முதலான நால்வர்க்கு உபதேசித்தார். அவ்வழித் திருமூலரும் உபதேசம் பெற்றார்.
* சிவஞானத்தைப் பெற விரும்புபவர்கள் சைவ சாதனங்களால் உள்ளும் புறமும் தங்களைத் தகுதியாக்கிக் கொள்ள வேண்டும்.
* சைவ சித்தாந்தத் தத்துவப் பொருள்கள் பதி, பசு, பாசம் என்ற மூன்றின் அடிப்படையில் கூறப்படுவன ஆகும்.
* யாக்கை, செல்வம், இளமை ஆகியவை நிலையாமை உடையனவாகும்.
* பிறனில் விழையாமை, புலால் உண்ணாமை ஆகியவை சிவ வழிபாட்டில் மிக இன்றியமையாதன ஆகும்.
* கல்வி, கேள்விகளில் அறம் செய்வதில் சைவப் பெருமக்கள் சிறந்து விளங்க வேண்டும்.
* அட்டாங்க யோகம் முதலிய யோகங்கள் சிவனருள் சிந்தையை வளர்க்கும்.
* உடம்பை வளர்த்து உயிரை வளர்க்க வேண்டும். உடம்புக்குள்ளே உயிரோடு இறைவன் கலந்திருக்கிறான்.
எனச் சைவ சமயத்தின் உண்மைநிலையைப் பற்றித் திருமந்திரம் குறிப்பிடுகிறது.