திருமால் கோயில்களில் செய்யக்கூடாத செயல்கள் என்று 32 தீய செயல்கள் குறிப்பிடப்படுகின்றன. அவை;
1. வாகனத்தில் சென்று கோவில் சன்னிதி முன் இறங்குதல் கூடாது. கோவிலுக்குச் செல்லும் போது காலணி அணிதல் கூடாது.
2. உத்சவம் நடக்கும் போது தரிசனம் செய்யாமல் இருந்தல் கூடாது.
3. பகவானை சாஷ்டாங்கமாக விழுந்து சேவிக்காமல் இருந்தல் கூடாது.
4. பாதி குனிந்து கொண்டு, ஒரு கையால் தரையைத் தொட்டு சேவித்தல் கூடாது.
5. பகவானுக்கு முன் ஆத்ம பிரதக்ஷனம் கூடாது.
6. தீட்டு / எச்சில் போது தரிசனம் கூடாது.
7. பகவானுக்கு முன் கால் நீட்டல் கூடாது.
8. பகவானுக்கு முன் கை மடக்கி, முழங்கால் சுற்றி அமர்தல் கூடாது.
9. சன்னிதானத்தில் படுத்தல் கூடாது.
10. சன்னிதானத்தில் அமர்ந்து சாப்பிடுதல் கூடாது.
11. சன்னிதானத்தில் ரகசியம் பேசுதல் கூடாது.
12. சன்னிதானத்தில் உரக்கப் பேசுதல் கூடாது.
13. கோவிலுக்குத் தொடர்பில்லாதவை பற்றிப் பேசுதல் கூடாது.
14. கோவிலில் அழுதல் கூடாது.
15. கோவிலில் கலகம் கூடாது.
16. அடித்தல் / தண்டனை கூடாது.
17. இன்னொருவரை அனுக்ரஹித்தல் கூடாது.
18. ஸ்த்ரியிடம் கண்ணியம் தவிர்த்தல் கூடாது.
19. பொதுவில் பேசத்தகாதது பேசுதல் கூடாது.
20. வாயு பிரிதல் கூடாது.
21. கம்பளி / போர்வை போர்த்திக்கக் கூடாது.
22. அடுத்தவரை வசை பாடக் கூடாது.
23. பகவானைத் தவிர்த்து, அடுத்தவரைத் துதி பாடக் கூடாது.
24. சக்தி இருக்கும் போது பகவானுக்கு உபச்சாரம் குறைவாகச் செய்தல் கூடாது.
25. திருவாராதனம் செய்யாததைச் சாப்பிடக் கூடாது.
26. காலத்துக்கு உண்டான பழத்தைச் சமர்ப்பிக்காமல் இருந்தல் கூடாது.
27. மிச்சத்தைச் சமர்ப்பித்தல் கூடாது.
28. பின் முதுகு காட்டி அமர்தல் கூடாது.
29. இன்னொருவரை வணங்குதல் கூடாது.
30. ஆச்சார்யர் புகழ் பாடாமல் இருந்தல் கூடாது.
31. சுய புகழ் பாடுதல் கூடாது.
32. தெய்வத்தை இகழ்தல் கூடாது.