இந்து சமயத்தில் இறை பக்தியினை ஐந்து வகைகளாக வகைப்படுத்தியிருக்கின்றனர்.
1. அழிஞ்சில் பக்தி
அழிஞ்சில் மரத்தின் காய் முற்றியவுடன் கீழே விழுந்து உடைந்ததும், அதன் விதைகள் ஓர் சக்தியில் தாய் மரத்தினை நோக்கி நகர்ந்து அடியில் ஒட்டிக் கொள்ளும். விதைகள் எங்கிருந்து வந்ததோ அங்கேயேச் சென்று விடுவது போல் பல தடைகளைத் தாண்டி இறைவனை அடைவதே நம் இலக்காக இருக்கும் பக்தி.
2. காந்த பக்தி
இரும்பைக் காந்தம் கவர்ந்து இழுத்து விடும். சில காலம் அப்படியே விட்டால், அந்த இரும்பிலும் காந்த சக்தி இருக்கும். நம் பக்தி விரும்பியதை அடைவதற்காக உண்டாவது. ஞானி, யோகிகளின் இறை வழிபாடு ஒரேத் திடமாய் இருப்பதால் அவர்களிடம் காந்த பக்தி தோன்றும்.
3. பதி பக்தி
தன் சொந்தக் காலில் நிற்கும் பெண்கள் கூட, பதி பக்தியில் சிறந்து விளங்குகின்றார்கள். பதிவிரதை சர்வ காலமும் தன் பதியின் நினைவிலே இருப்பதைப் போல், நாமும் இறைவன் நினைவிலேயே இருக்க வேண்டும்.
4. கொடி பக்தி
கொம்பைச் சுற்றியிருக்கும் கொடியை பிரித்தெடுத்தாலும், அடுத்த நாளில் அது மீண்டும் போய் கொம்பைச் சுற்றிக் கொள்ளும். நம் பக்தியும் இப்படி இருக்க வேண்டும்.
5. நதி பக்தி
கடல் நீர் ஆவியாகி உப்புச் சுவையின்றி மேலேச் சென்று, மழையாகப் பொழிந்து, நிலத்தின் சுவையை அடைந்து மீண்டும் உப்பின் சுவை பெற்றுக் கடலில் கலக்கின்றது. இறைவனை நோக்கி நாம் செல்லும் போது, எவ்வளவு தடைகள் வந்தாலும், அதைக் கடந்து செல்லும் நம்மைக் கடல் நீர் நதி நீரை எதிர்கொண்டு அழைப்பதைப் போல் இறைவன் எதிர்கொள்வார்.