உலகில் அதர்மம் தலையெடுக்கும் போது, விஷ்ணு உலகில் தோன்றி உலகைக் காப்பதாக வைணவர்கள் கருதுகின்றனர். இதற்காக விஷ்ணு எடுத்தத் தோற்றங்களை சப்தாவதாரம், தசாவதாரம் என எண்ணிக்கை அடிப்படையில் குறித்து வைக்கின்றனர். பாகவதப் புராணத்தில் விஷ்ணு இருபத்தைந்து தோற்றங்களை எடுத்ததாகக் கூறப்பட்டுள்ளது.
சப்தாவதாரம் எனப்படும் ஏழு தோற்றங்கள்
1. தத்தாத்ரேயர்
2. பரசுராமர்
3. ரகுநாதன்
4. வியாசர்
5. கிருஷ்ணன்
6. உபேந்திரன்
7. கல்கி
தசாவதாரம் எனப்படும் பத்து தோற்றங்கள்
1. மச்ச அவதாரம்
2. கூர்ம அவதாரம்
3. வராக அவதாரம்
4. நரசிம்ம அவதாரம்
5. வாமண அவதாரம்
6. பரசுராம அவதாரம்
7. இராம அவதாரம்
8. பலராம அவதாரம்
9. கிருட்டிண அவதாரம்
10. கல்கி அவதாரம்
ஸ்ரீமத் பாகவதம் குறிப்பிடும் 24 தோற்றங்கள்
1. சனகாதி முனிவர்கள்
2. ஆதிபுருட அவதாரம்
3. வராக அவதாரம்
4. நாரத அவதாரம்
5. நரநாரயண அவதாரம்
6. கபில அவதாரம்
7. யக்ஞ அவதாரம்
8. ரிசபதேவ அவதாரம்
9. பிருது அவதாரம்
10. அயக்கிரீவ அவதாரம்
11. அம்ச அவதாரம்
12. வியாச அவதாரம்
13. மச்ச அவதாரம்
14. கூர்ம அவதாரம்
15. தன்வந்திரி அவதாரம்
16. மோகினி அவதாரம்
17. நரசிம்ம அவதாரம்
18. வாமன அவதாரம்
19. பரசுராம அவதாரம்
20. ராம அவதாரம்
21. தத்தாத்ரேய அவதாரம்
22. பலராம கிருட்டிண அவதாரம்
23. புத்த அவதாரம்
24. கல்கி அவதாரம்