வைணவர்கள் இருபத்து நான்கு ஏகாதசி விரதங்களைக் கடைபிடிக்கின்றனர். இவ்விரதங்களைப் கடைப்பிடித்து திருமாலின் அருளை பெற்று நீங்காத செல்வம் பெறலாம் என்பது வைணவர்களின் நம்பிக்கை.
சித்திரை
* சுக்ல பட்சம் - காமதா விரதம் - நினைத்த செயல்கள் நடக்கும்
* கிருட்டிண பட்சம் - பாப மோசனிகா விரதம் - பாபங்கள் அகலும்
வைகாசி
* சுக்ல பட்சம் - மோகினி விரதம் - பாவங்கள் நீங்கும்
* கிருட்டிண பட்சம் - வருதிந் விரதம் - பிரம்மகத்தி தோசம் நீங்கும்
ஆனி
* சுக்ல பட்சம் - நிர்சலா (பீம) விரதம் - அனைத்து ஏகாதசி பலனும் உண்டு
* கிருட்டிண பட்சம் - அபார விரதம் - குரு நிந்தனை, பொய் சாட்சி போன்றவை அகலும்
ஆடி
* சுக்ல பட்சம் - சயிநீ விரதம் - தெய்வ சிந்தனை அதிகமாகும்
* கிருட்டிண பட்சம் - யோகினீ விரதம் - நோய் நீங்கும்
ஆவணி
* சுக்ல பட்சம் - புத்ரசா விரதம் - மகப்பேறு கிடைக்கும்
* கிருட்டிண பட்சம் - சாமிகா விரதம் - விருப்பங்கள் நிறைவேறும்
புரட்டாசி
* சுக்ல பட்சம் - பத்மநாபா விரதம் - பஞ்சம் நீங்கும்
* கிருட்டிண பட்சம் - அசா விரதம் - இழந்ததைப் பெறலாம்
ஐப்பசி
* சுக்ல பட்சம் - பாபாங்குசா விரதம் - கங்கையில் நீராடிய பலன் கிடைக்கும், பாபங்கள் அகலும்
* கிருட்டிண பட்சம் - இந்திரா விரதம் - முன்னோர்கள் (பித்ருக்கள்) நல்ல நிலையை அடைவர்
கார்த்திகை
* சுக்ல பட்சம் - ப்ரபோதின் விரதம் - உயர்ந்த நன்மைகள் உண்டாகும்
* கிருட்டிண பட்சம் - ரமா விரதம் - உயர்ந்த பதவி, வைகுண்ட பதவி கிடைக்கும்
மார்கழி
* சுக்ல பட்சம் - மோட்ச விரதம் - வைகுண்டம் கிடைக்கும்
* கிருட்டிண பட்சம் - உற்பத்தி விரதம் - அனைத்துப் பயன்களும் கிடைக்கும்
தை
* சுக்ல பட்சம் - புத்ரதா விரதம் - மகப்பேறு கிடைக்கும்
* கிருட்டிண பட்சம் -சபலா விரதம் - பாவங்கள் நீங்கும்
மாசி
* சுக்ல பட்சம் - செயா விரதம் - பேய்க்கும் மோட்சம் உண்டு
* கிருட்டிண பட்சம் - செட்திலா விரதம் - அன்னதானம் செய்த பலன் உண்டு
பங்குனி
* சுக்ல பட்சம் - விசயா விரதம் - கணவன் - மனைவி அன்பு பெருகும்
* கிருட்டிண பட்சம் - கமலா விரதம் - மகாலட்சுமியின் அருள் கிடைக்கும்