துஷ்சகன் என்பவன் மனைவி நிர்மாஷ்டி. அவர்களுக்கு எட்டுப் ஆண் பிள்ளைகள், எட்டுப் பெண் பிள்ளைகள். அவர்களால் உலகில் எல்லார்க்கும் தொல்லைகள்தான். அவர்களால் வரும் தொல்லைகளும், அத்தொல்லைகளிலிருந்து மீள்வதற்கான வழிமுறைகளும்;
ஆண் பிள்ளைகள்
1. தந்தக் கிருஷ்டி - பற்களில் வசித்துக் குழந்தையைப் பீடிப்பான்.
அரக்கர்களைக் கொல்லும் மந்திரத்தைச் சொல்லி வெள்ளைக்கடுகை இறைத்தால் இத்தொல்லை விலகும்.
2. உத்தி - வாக்கினால் வெளிப்பட்டு சிசுக்களைப் பீடிப்பான்.
பகவான் நாம சங்கீர்த்தனத்தாலும், மங்கல வார்த்தைகளாலும் அவனிடமிருந்து மீளலாம்.
3. பரிவர்த்தகன் - கருவில் பிறந்த குழந்தையைப் பீடிப்பான்.
வெள்ளைக் கடுகினால் இவனையும் வெல்லலாம்.
4. அங்கத்ருகன் - வாயுவைப் போல் பீடிப்பான்.
தர்ப்பைகளால் வெல்ல வேண்டும்.
5. சகுனி - பறவைகளால் கெடுதலைச் செய்வான்.
தொடங்கிய செயலைக் கைவிடுதலே நல்லது.
6. கண்ட ப்ராந்தாதி - கழுத்திலிருந்து தொல்லை கொடுப்பான்.
இறை வேண்டுதல், பெரியோர்கள் ஆசி மூலம் இதை விலக்கலாம்.
7. கர்ப்பஹா - கர்ப்பத்தைக் கலைப்பவன்.
சிவ, ராம (அ) கிருஷ்ண நாமங்களால் இவனை விரட்டலாம்.
8. சம்சயஹா - பயிர் பச்சைகளை அழிப்பவன்.
விவசாய நிலங்களில் பழைய செருப்பைத் தொங்க விட்டு இவனை விரட்டலாம்.
பெண் பிள்ளைகள்
1. நியோஜிஜா - பிற ஆண் (அ) பெண் மீது ஆசையை உண்டாக்குவாள்.
சாத்திரப் பரப்புரையால் இவளை விரட்டலாம்.
2. விரோகினி - குடும்ப அங்கத்தினர்களிடையேப் பகைமை உண்டாக்குவாள்.
நல்ல எண்ணம் கொள்ளுதல், பொறுமையால் இவளை வெல்லலாம்.
3. சுவயம்ஹரி - பண்டங்களைக் கெடுப்பவள்.
வேள்விகள் செய்தால் அவளால் வரும் பீடை அகலும்.
4. பிராமணி - சித்த சஞ்சலம் உண்டாக்குவாள்.
வெள்ளைக் கடுகால் இவளை அடக்கலாம்.
5. ருதுகாரிகா - ருது மூலம் பெண்களைக் கெடுப்பவள்.
நதியில் நீராடுவதால் இவளை வெல்லலாம்.
6. ஸ்மிருதிஷா - நினைவை மறக்கச் செய்வாள்.
தியானத்தால் வெல்லலாம்.
7. பீஜஹாரிணி - ஆண்களின் பீஜத்தைக் கெடுப்பவள்.
புனித நீராடல், தூய்மை, குறைவான உணவு பழக்கங்கள் மூலம் இவளை வெல்ல வேண்டும்.
8. துவேஷினி - எல்லோரும் வெறுக்கக் கூடிய காரியங்களைச் செய்யக்கூடியவள்.
ஹோமம், பூஜை ஆகியவற்றால் இவளை வெல்லலாம்.