இராமாயணப் போரின் போது சக்தி வாய்ந்த அரக்கனும், கறுப்பு மந்திரவாதியும், இருண்ட கலைகளைப் பயிற்றுவிப்பவருமான அஹிரவணனைக் கொல்ல அனுமான் பஞ்சமுகி எனும் ஐந்து முக வடிவத்தை எடுத்துக் கொண்டார்.
அனுமனின் ஐந்து முகங்களும் ஐந்து திசைகளைப் பார்த்துக் கொண்டிருப்பதாக அமைந்திருந்தன. அவை;
1. அனுமன் முகம் - (கிழக்கு நோக்கி)
இந்த முகம் பாவத்தின் அனைத்துக் கறைகளையும் நீக்கி மனதின் தூய்மையை அளிக்கிறது.
2. நரசிம்ம முகம் - (தெற்கு நோக்கி)
இந்த முகம் எதிரிகளின் பயத்தை நீக்கி வெற்றியை அளிக்கிறது. (நரசிம்மம் என்பது விஷ்ணுவின் மனித சிங்கத் தோற்றம். தனது பக்தனான பிரகலாதனைத் தனது தீய தந்தை ஹிரண்யகசிபுவிடமிருந்து பாதுகாக்க இவ்வடிவம் எடுத்தார்)
3. கருடன் முகம் - (மேற்கு நோக்கி)
இந்த முகம் தீய மந்திரங்கள், சூனியம் தாக்கங்கள், எதிர்மறை ஆவிகள் ஆகியவற்றை விரட்டுகிறது. மேலும் ஒருவரின் உடலில் உள்ள அனைத்து விச விளைவுகளையும் நீக்குகிறது. (கருடா விஷ்ணுவின் வாகனம், இந்தப் பறவைக்கு மரணத்தின் ரகசியங்களும், அதற்கு அப்பாலும் தெரியும்)
4. வராக முகம் - (வடக்கு நோக்கி)
இந்த முகம் கிரகங்களின் மோசமான தாக்கங்களால் ஏற்படும் தொல்லைகளைத் தடுக்கிறது. மேலும் எட்டு வகையான செலவங்களையும் வழங்குகிறது. (வராகா, விஷ்ணுவின் மற்றொரு தோற்றம், அவர் இந்த வடிவத்தில்தான் நிலத்தைத் தோண்டினார்)
5. ஹயக்ரீவா முகம் - (மேல் நோக்கி)
இந்த முகம் அறிவு, வெற்றி, நல்ல மனைவி மற்றும் சந்ததியை வழங்குகிறது.
அனுமனின் ஐந்து முக வடிவம் மிகவும் சிறப்புடையது. இதனை வடமொழியில் பஞ்சமுக ஆஞ்சநேயா மற்றும் பஞ்சமுகி ஆஞ்சநேயா என்று அழைக்கின்றனர். இது வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு மற்றும் மேல்நோக்கிய திசை / உச்சநிலை ஆகிய ஐந்து திசைகளில் விழிப்புணர்வையும் கட்டுப்பாட்டையும் குறிக்கிறது.