திருமால் எழுந்தருளியுள்ள இடங்களும், அதில் அவரது சிறப்புகளும் பற்றி ஒரு பாடலில் கீழ்க்காணும் தகவல்கள் இடம் பெற்றிருக்கின்றன.
1. திருவிண்ணகர் - பொன்மலைபோல் எழுந்தருளியுள்ளான்.
2. திருக்குடந்தை - போர்செய்த காளையைப் போல் சாய்ந்து பள்ளி கொண்டுள்ளான்.
3. திருக்குறுங்குடி - பவள மலை போல் விளங்குகின்றான்.
4. திருஎவ்வுள் - மலைபடுத்தது போல் காட்சி கொடுக்கின்றான்.
5. திருக்கண்ணமங்கை - கற்பக மரமாக எழுந்தருளுகின்றான்.
6. திருவெள்ளறை - திருமகளுடன் விளங்குகின்றான்.
7. திருப்புட்குழி - மரகதம் ஆக எழுந்தருளுகின்றான்.
8. திருவரங்கம் - நீலமணிபோல் விளங்குகின்றான்.
9. திருவல்லவாழி - நப்பின்னைப் பிராட்டியின் நாயகன் ஆக உள்ளான்.
10. திருப்பேர் - பிடிப்பில்லாத பெருமான் ஆக விளங்குகிறான்.
11. திருக்கடல்மல்லை - நித்தியவாசம் செய்கின்றான்.
12. திருத்தண்கால் - வலிமையாளன் ஆகக் காட்சி அளிக்கின்றான்.
13. திருவழுந்தூர் - சோதியாய் விளங்குகின்றான்.
14. திருக்கோட்டியூர் - சக்கரப் படை ஏந்தி உள்ளான்.
15. திருமெய்யம் - அமுத வெள்ளம் ஆக எழுந்தருளி உள்ளான்.
16. திருவிந்தளூர் - அந்தணனாய் உள்ளான்.
17. காஞ்சியில் உள்ள திருவேளுக்கை - நரசிம்மனாய் உள்ளான்.
18. திருவெஃகா - பள்ளி கொண்டுள்ளான்.
19. திருமூழிக்களம் - விளக்காக உள்ளான்.
20. திருஆதனூர் - காலங்களை அளக்கும் இறைவனாக உள்ளான்.
21. திருநீர் மலை - நேற்று, இன்று, நாளை ஆகிய மூன்று காலங்களுக்கும் தலைவன் ஆக உள்ளான்.
22. திருப்புல்லாணி - நான்கு வேதங்கள் ஆக உள்ளான்.
23. திருத்தலைச்சங் காடு - முழுச் சந்திரன்போல் உள்ளான்.
24. திருவாலி - அமுதமாகக் காட்சி அளிக்கின்றான்.