விநாயகர் 12 தோற்றங்கள் எடுத்ததாக, விநாயகப் புராணம் என்ற நூல் கூறுகிறது. அவை;
1. வக்ரதுண்ட விநாயகர்
உலகம் ஒவ்வொரு முறை அழியும் போதும் தோன்றி, மீண்டும் உலகத்தைப் படைப்பதற்கான வழிமுறைகளை திருமால், பிரம்மா, ருத்ரன் (சிவ வடிவம்) ஆகியோருக்கு அருளுவார்.
2. கஜான விநாயகர்
சிந்தூரன் என்ற அரக்கனை அழிப்பதற்காகத் தோன்றியவர்.
3. விக்கிரன ராஜர்
காலரூபன் என்ற அரக்கனை கொல்வதற்காகப் பிறந்தவர்.
4. மயூரேசர்
பிரம்மாவிடம் இருந்த வேதங்களை, கமலாசுரன் என்ற அசுரன் திருடிச் சென்ற போது, மயில் வாகனத்தில் சென்று, அவனை வென்று வேதங்களை மீட்டவர்.
5. உபமயூரேசர்
சிந்தாசுரன் என்ற அசுரன், தேவர்களைச் சிறை வைத்தபோது அவனை அழித்தவர்.
6. பாலச்சந்திரர்
தூமராசன் என்ற அசுரனை கொன்றவர்.
7. சிந்தாமணி
கபிலர் என்ற முனிவரிடம் இருந்த சிந்தாமணி என்ற முக்கியப் பொருளை, கனகராஜன் என்பவன் திருடிச் சென்றான். உயிர்காக்கும் அந்தச் சிந்தாமணியை அவனிடமிருந்து மீட்டவர்.
8. கணேசர்
பலி என்ற அசுரன் தேவர்களைத் துன்புறுத்திய போது, ஐந்து முகத்துடன் தோன்றி அவனை அழித்தவர்.
9. கணபதி
கஜமுகாசுரனை வென்றவர்.
10. மகோற்கடர்
காசிராஜன் என்ற புகழ்பெற்ற அரசனுக்கு நராந்தகன், தேவாந்தன் என்ற கொடியவர்கள் துன்பம் செய்துவந்தனர். அதனால், உலகத்தில் தர்மம் அழிந்தது. அவர்களை அழிக்கத் தோன்றியவர்.
11. துண்டி
துராசதன் என்ற அசுரனை வென்றவர்.
12. வல்லபை விநாயகர்
மாரீச முனிவரின் மகளான வல்லபையைத் திருமணம் செய்தவர்.