ஐப்பசி மாத வளர்பிறை துவிதியை நாளில் எமதர்மன், தன் சகோதரியான எமியின் வீட்டுக்குச் சென்றார்.
அவரை அன்புடன் வரவேற்ற எமி, விருந்தளித்து உபசரித்தார். எமதர்மனும் சகோதரிக்குப் பல்வேறு பரிசுகளை வழங்கினார்.
அப்போது எமி, எமதர்மனிடம், “தன்னைச் சந்தித்த இந்த நாளை, இப்புவியில் இருப்பவர்கள் அனைவரும் கொண்டாட வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.
உடனே எமதர்மன், “இந்த ஐப்பசி மாத வளர்பிறை துவிதியை திதி நாளில், தன் சகோதரியின் கைகளால் திலகம் இட்டுக் கொள்பவர்களை நான் துன்புறுத்த மாட்டேன். அவர்களுக்கு எமனால் ஏற்படும் துன்பங்கள் ஏதும் இருக்காது'' என்று உறுதியளித்தார்.
அதன் பிறகு, ஆண்டுதோறும் வடநாட்டுப் பெண்கள், தங்கள் சகோதரர்களைச் சந்தித்து, அவர்கள் நெற்றியில் திலகமிட்டு வாழ்த்தும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டனர். ஆண்களும், தங்கள் சகோதரிகளின் வீடுகளுக்குச் சென்று, அவர்களுக்கு புத்தாடைகள், இனிப்புகள் மற்றும் பரிசுகளை வழங்கி அவர்களின் அன்பைப் பெற்றுக் கொள்கின்றனர்.
சகோதரப் பாசத்தை வலியுறுத்தும் இந்நாளை எம துவிதியை நாள் என்று போற்றிக் கொண்டாடுகின்றனர்.