வைணவர்கள், தங்களது உணவுப் பொருள்களை மூன்று வகைகளாக வகைப்படுத்தியிருக்கின்றனர். அவை;
1. சத்துவகுணப் பொருட்கள்
எல்லாவிதப் பச்சரிசி, தினை, உளுந்து, பச்சைப்பயிறு, பொரி, அவல், சுக்கு, இஞ்சி, மிளகு, சீரகம், வெந்தயம், வெல்லம், சர்க்கரை, கற்கண்டு, தேன், திராட்சைப் பழம், பேரீச்சம்பழம், சாதிக்காய், சாதிப்பத்திரி, ஏல அரிசி, பச்சைக் கற்பூரம், குங்குமப்பூ வாதுமை, நல்லெண்ணெய், தேங்காய், தேங்காய் எண்ணெய், பசும்பால், தயிர், வெண்ணெய், நெய், கொத்தவரைக்காய், பாகற்காய், வெள்ளரிக்காய், வாழைக்காய், பலாக்காய், விளாம்பழம், இலந்தைக்காய், பழம், களாக்காய், மாங்காய், மணத்தக்காளிக்காய், சுக்காங்காய், நார்த்தங்காய், பழம், சுண்டைக்காய், நெல்லிக்காய், சேப்பங்கிழங்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, சேப்பங்கீரை, வெண்கீரை, செங்கீரை, வாழைத் தண்டு, பிரண்டை, கறிவேப்பிலை, தூதுவளை, பசுமுள்ளை, கொத்தமல்லித்தழை, பொன்னாங்கண்ணிக் கீரை, மணத்தக்காளிக் கீரை, அகத்திக்கீரை, அனைத்து வகை வாழைப்பழங்கள், பலாப்பழம், மாம்பழம், நாவற்பழம், கிச்சிலிப்பழம், கொய்யாப்பழம், இளநீர், பன்னீர் ஆகியவை.
2. இராசசகுணப் பொருட்கள்
சவ்வரிசி, துவரை, கடலை, முந்திரிப்பருப்பு, வேர்க்கடலை, மஞ்சள், பெருங்காயம், சீரகம், புளி, மிளகாய், உப்பு, கடுகு, கொத்தமல்லி (தனியா), இலவங்கம், இலவங்கப்பட்டை, கசகசா, பாக்கு, ஆட்டுப்பால், புடலங்காய், வெண்டைக்காய், பூசணிக்காய், அத்திக்காய், புளியங்காய், மாங்காய், எலுமிச்சம்காய், சர்க்கரைக்கிழங்கு, கருணைக்கிழங்கு, வெற்றிலை, வள்ளிக்கிழங்கு, கொட்டிக்கிழங்கு, புளியங்கொழுந்து, வெற்றிலை, புதினா, வாழைப்பூ, ஆவாரம்பூ, சீமை அத்திப்பழம், மாதுளம்பழம், அன்னாசிப்பழம் ஆகியவை.
3. தாமசகுணப் பொருட்கள்
புழுங்கலரிசி, கேழ்வரகு, வரகு, கம்பு, சோளம், பட்டாணி, மொச்சை, பனிப்பயிறு, கொள்ளு, பனை, ஈச்சை, தென்னை வெல்லம், பனங்கற்கண்டு, எருமைப்பால் முதலானவை. கத்திரிக்காய், அவரைக்காய், கீரை, பூண்டு மற்றும் முதல் இரண்டு வகைகளில் சொல்லாத கிழங்குகள் (எ.டு., உருளை, மரவள்ளிக்கிழங்கு) வெங்காயம், வெள்ளைப்பூண்டு, மற்றக் கீரை வகைகள், சீதாப்பழம், பனம்பழம், நுங்கு, ஆமணக்கெண்ணெய் போன்றவை.