1. மனத்தை அடக்குதல் புலன்களை அடக்குதல் பரமாத்மாவின் காட்சி. அனைத்து உயிர்களையும் சமமாகக் காணல், இவை பிராமணக் குணங்கள் (கீதை 18.42)
2. வீரம் தைரியம் தானம் தெளிவான சிந்தனை இவைகளையுடையோர் ஷத்திரியர் குணங்கள் (கீதை18.43)
3. விவசாயம், வணிகம், கால்நடை வளர்த்தல் இவைகள் வைசியர் குணங்கள் (கீதை 18.44)
4. முதலாளி கொடுக்கும் வேலையை செய்வது சூத்திரர் குணங்கள். (கீதை18.44)
இந்த நான்கு பிரிவின் கீழ்தான் மனிதர்கள் வகைப்படுத்தப்பட்டிருந்தனர். பிற்காலத்தில் அவை நான்கு சாதியாக மாற்றம் பெற்று, தற்போது பல்வேறு சாதிகளாகப் பெருகிப் போய்விட்டன.
தலை - பிராமணன் தலைப்பகுதியிலுள்ள மூளையைப் பயன்படுத்தி அறிவின் மூலம் வேலை செய்கிறான்.
கை - ஷத்திரியன் தனது கை பலத்தாலும், வீரத்தாலும் நாட்டைக் காக்கிறான்.
வயிறு - வைசியன் உயிர்களுக்குத் தேவையான உணவை உற்பத்தி செய்கிறான், விற்பனைக்கு வழங்குகிறான்.
கால் - சூத்திரன் தன் எஜமானன் சொன்ன அனைத்துச் செயல்களையும் செய்கிறான்.
இந்த நிலையைப் பிற்காலத்தில் சாதிகளாகவும், சாதிக்கான வேலைகளாகவும் மாற்றிவிட்டனர்.