இல்லறத்தில் வாழும் ஒவ்வொரு வரும் தினமும் செய்யவேண்டியதாக ஐந்துவித யாகங்கள் இருக்கின்றன. அவை;
1. தேவ யாகம்
ஒவ்வொருவரும் தினம் ஏதாவது ஒரு தெய்வத் திருமேனியைத் தரிசித்து வணங்க வேண்டும்.
2. பூத யாகம்
ஒவ்வொருவரும் தினமும் ஒரு பசு, பூனை, காகம், நாய், எறும்பு, குருவி, குரங்கு, பட்சி ஆகிய ஏதாவது ஓர் உயிரினத்துக்கு ஒருபிடி உணவு அளிக்க வேண்டும்.
3. மனித யாகம்
தினமும் ஒரு ஏழை மனிதனுக்கு உணவளித்து வாழ்தல் மனித யாகம்.
4. பிரம்ம யாகம்
அறிவைக் கொடுத்த ஆசானையும், ஞானம் கொடுத்த ரிஷியையும், தெளிவைக் கொடுத்த பெரியவர்களையும் மதித்து நடப்பது பிரம்ம யாகமாகும்.
5. பிதுர் யாகம்
நம்முடைய காலஞ்சென்ற முன்னோர்களுக்கு அர்ப்பணம் செய்தல், தீபம் ஏற்றல் முதலியவற்றைத் தவறாமல் செய்வது பிதுர் யாகம்.