விக்னேஸ்வரர், சனீஸ்வரர், ராவணேஸ்வரன், சண்டிகேஸ்வரர் ஆகிய நால்வர் மட்டுமே ஈஸ்வரப் பட்டம் பெற்றவர்களாவர். ஆனால், கும்பகோணம் அருகிலுள்ள திருப்பேணுபெருந்துறை (திருப்பந்துறை) சிவானந்தேஸ்வரர் கோயிலில் உள்ள முருகப்பெருமான், பிரணவேஸ்வரர் என்றழைக்கப்படுகிறார்.
சிவன் எல்லாம் அறிந்தவராக இருக்க, சிறியவனாகிய தான், தந்தைக்கு பிரணவ உபதேசம் செய்ததை எண்ணி வருத்தம் கொண்டார் முருகன். எனவே அவர், இத்தலத்தில் லிங்க பிரதிஷ்டை செய்து சிவனை வழிபட்டு மன அமைதி பெற்றார்.
சிவன் அவருக்கு காட்சி தந்து, நீயும் நானும் ஒன்றே எனக்கூறி மைந்தனை தேற்ற, மனம் தெளிவடைந்தார் முருகன்.
எனவே, இங்கிருக்கும் முருகனுக்கு பிரணவேஸ்வரர் என்று பெயர் பெற்றார்.