ஆன்மத் தத்துவம் என்பது உட்கருவி 4, அறிவுப்பொறிகள் 5, தொழிற்பொறிகள் 5, ஐம்புலன்கள் 5, பூதங்கள் 5 என்று மொத்தம் 24 ஆக இருக்கிறது. அவை;
1. உட்கருவி - புத்தி, மனம், அகங்காரம், சித்தம் - 4
2. அறிவுப் பொறிகள் - மெய், வாய், கண், மூக்கு, செவி - 5
3. தொழிற்பொறிகள் - மொழி, கால், கை, எருவாய், கருவாய் - 5
4. ஐம்புலன்கள் - ஓசை, ஊறு, ஒளி, சுவை, நாற்றம் - 5
5. ஐம்பூதங்கள் - வான், வளி, அனல், புனல், மண் - 5
அனந்த தேவர் வழி நிற்கும் சீகண்ட உருத்திரர் சகலருக்கும் இறைவர். ஆகவே, அவர் தொழிற்படுத்தும் பிரகிருதி மாயையினின்றும் கலையிலிருந்தும் தோன்றும் காரியங்கள் ஆன்மத் தத்துவமாகும்.