நாம் இறைவனுக்கு எந்தப் பூக்களைக் கொண்டு அர்ச்சனை செய்வது? அந்த அர்ச்சனையால் நமக்கு என்ன பயன்கள் கிடைக்கும்? என்று இந்து மத புராணங்களில் கூறப்பட்டுள்ளது.அவற்றில் சில இங்கே...
இறைவனை அர்ச்சிக்க உதவும் பூக்கள்
விநாயகர் - செம்பருத்தி, தாமரை, ரோஜாமலர்,அருகம்புல்.
முருகன் - மல்லிகை, முல்லை, சாமந்தி, ரோஜா, சூரியகாந்தி.
அம்மன் -மல்லிகை, முல்லை, செவ்வரளி, செம்பவளமல்லி, சூரியகாந்தி, வெண்தாமரை.
சிவன் -தும்பை, வில்வம, செந்தாமரை, செம்பருத்தி, புன்னை, வெள்ளெருக்கு, நந்தியாவட்டம், செண்பகம், இவை எட்டும் அட்டபுட்பங்கள் எனப்படும்.
விஷ்ணு - தாமரை, பவளமல்லி, மருக்கொழுந்து, துளசி.
நாம் அர்ச்சனை செய்யும் பூக்களால் நமக்குக் கிடைக்கும் பயன்கள்
தாமரை - தெய்வீகப் பேருணர்வையும் சைத்திய சக்தியையும் தரும்.
ரோஜா - சரணாகதிப் பாவனை தந்து, ஆண்டவன்பால் இனிய எண்ணத்தையும் தந்து, தியானம் வளர்க்கும்.
அருகம்புல் - கண்பார்வையைப் பெருக்கும் நரம்புகளுக்கு வலிமையூட்டும்.
எருக்கம் பூ - பயத்தை ஒழித்து தைரியத்தைக் கொடுக்கும்.
செம்பருத்தி, அரளி - தவறான போக்கினைத் தடுத்து நல்ல வழிக்கு மாற்றிச் செல்லும்.
முல்லை, மல்லிகை - புனிதத்தன்மை தரும்.சமநிலை அளிக்கும்.
துளசிப்பூவும் இலையும் - பக்தி தரும்.
மருக்கொழுந்து - வேண்டாதவற்றை விட்டு வேண்டியவற்றைப் பெறலாம்.
பவளமல்லி - சிறந்த விருப்பங்களை வளர்க்கும்.
நந்தியாவட்டம் - பொருள் பற்றாக் குறையை நீக்கி செல்வத்தைக் கொடுக்கும்.
*****
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.