இந்து சமயத்தினர் கடைப்பிடிக்கும் விரதங்களை இருபெரும் வகைகளுள் அடக்கலாம். அவை;
1. கடவுளுக்குரியவை
சிவவிரதங்கள், விநாயக விரதங்கள், கந்த விரதங்கள், சக்தி விரதங்கள், விஷ்ணு விரதங்கள் முதலியவை நாம் கடவுளை நினைத்துக் கடைப்பிடிக்கும் விரதங்களாகும்.
2. முன்னோர்களுக்குரியவை
மாதத்திலே வரும் அமாவாசை, முழுநிலவு நாட்களிலும், புரட்டாசி மாதத்திலே வரும் மகாளய பட்சத்திலும், வருடந்தோறும் நம் தாய், தந்தையர் சிவபதமடைந்த திதிகள் வரும் தினங்களிலும், நாம் கடைப்பிடிக்கும் விரதங்களாகும்.
விரதங்கள் கடைப்பிடிப்பவர் விரதக் காலங்களில் தாம்பூலம் தரித்தல் (உட்கொள்ளுதல்), புகைப்பிடித்தல், பகலில் நித்திரை செய்தல் போன்றவை செய்யத்தகாத செயல்களாகும்.