திருப்பதி என்றதும் நம் நினைவுக்கு வருவது ஏழுமலைகள்தான். இந்த ஏழுமலைகளில் ஐந்து சீனிவாசப் பெருமாள்கள் இருக்கின்றனர்.
1. வேங்கட மலை
‘வேம்’ என்றால் பாவம். ‘கட’ என்றால் நாசமாக்குதல், நீக்குதல் என்று பொருள். பாவங்களை நீக்கக்கூடிய அல்லது போக்கக்கூடிய மலை. இந்த மலையில் வெங்கடாசலபதியாக திருமால் காட்சி தருகிறார்.
2. சேஷ மலை
திருமாலின் அவதாரம் ஆதிசேஷன். இவர் மலையாக அமைந்ததால் அந்த மலைக்கு பெயர் ‘சேஷ மலை’ என்று பெயர். திருப்பதிக்குத் தினமும் மண் பானையில் தயிர்சாதம் மட்டும் தான் நைவேத்தியமாக படைக்கப்படுகிறதாம்.
3. வேத மலை
வேதங்கள் இங்கு மலை வடிவில் தங்கி வெங்கடாசலபதியை வழிபட்டதாகக் கூறப்படுகிறது. அதனால் இந்த மலை வேதமலை என்று அழைக்கப்படுகிறது.
4. கருட மலை
கருட பகவான் திருமாலை வணங்க இங்கு வந்தார். அப்போது வைகுண்டத்திலிருந்து ஏழுமலையானை எடுத்து வந்தார். அதன் காரணமாக, இந்த மலை ‘கருட மலை’ எனப்படுகிறது.
5. விருஷப மலை
விருஷபாசுரன் (ரிஷபாசுரன்) என்ற அசுரன் நரசிம்மரை நினைத்து கடும் தவமிருந்தான். தவத்தில் மகிழ்ந்த திருமாலுக்கு நரசிம்மர் தோற்றத்தில் காட்சியளித்தார். அப்போது அசுரன் அவருடன் போர் செய்து, அவரால் கொல்லப்பட்டு முக்தியடைந்தான். அதனால், இந்த மலைக்கு ‘விருஷப மலை’ என்று பெயர். இம்மலையினை ரிஷபாத்ரி என்றும் அழைக்கின்றனர்.
6. அஞ்சன மலை
அனுமன் தாயின் பெயர் அஞ்சனை. தனக்குக் குழந்தை வரம் வேண்டும் என ஆதிவராகரை நினைத்து தவமிருந்தார். அதன் காரணமாக ஆஞ்சநேயரைப் பெற்றெடுத்தாள். அதன் காரணமாக, அவரது பெயராலேயே ‘அஞ்சன மலை’ என்று அழைக்கப்படுகிறது.
7. ஆனந்த மலை
ஒரு முறை ஆதிசேஷனுக்கும், வாயு பகவானுக்கும் இடையேப் போட்டி ஏற்பட்டது. அதன் நடுவராக மகாவிஷ்ணு இருந்தார். அந்தப் போட்டியின் முடிவில் இருவரின் பலமும் சமமானது என தீர்ப்பளித்தார். அதனால் ஆதிசேஷனும், வாயுபகவானும் மகிழ்ச்சியால் மிகவும் ஆனந்தமடைந்தனர். அதனால் இந்த மலைக்கு ‘ஆனந்த மலை’ என்ற பெயர் ஏற்பட்டது.