பஞ்சப் பிரயாகை என்பது ஐந்து ஆறுகள் சந்திக்குமிடம் எனும் பொருள் கொண்டது.
பஞ்ச என்ற வட மொழிச் சொல்லிற்கு ஐந்து என்றும், பிரயாகை என்பதற்கு ஆற்றுச் சந்திப்பு என்றும் பொருளாகும்.
இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலம், கார்வால் கோட்டம், சமோலி மாவட்டம் மற்றும் டெக்கிரி மாவட்டங்களில் பாயும் கங்கை ஆற்றின் துணை ஆறுகளான பாகீரதி ஆறு, அலக்நந்தா ஆறு, மந்தாகினி ஆறு, பிந்தர் ஆறு மற்றும் தௌலி ஆறுகள் இங்கு கூடுகின்றன.
இந்த ஆறுகள் கங்கையாற்றுடன் கூடுமிடங்களை தேவப் பிரயாகை, ருத்திரப் பிரயாகை, கர்ணப் பிரயாகை, விஷ்ணுப் பிரயாகை மற்றும் நந்தப் பிரயாகை என்றழைக்கின்றனர்.
ஆறுகள் சங்கமம் ஆகும் இடத்தில் புனித நீராடுவதால், செய்த பாவங்கள் போகும் என்பது இந்துக்களின் தொன்ம நம்பிக்கையாகும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.