திருமலையின் வேறு பெயர்கள்!
வெங்கிடாசலபதியை “ஏழுமலையான்” என்று குறிப்பிடுகிறோம். அவர் கோயில் கொண்டுள்ள ஏழுமலைகளைக் கொண்டுள்ள அந்த இடம் திருமலை என்று சொல்கிறோம்.
அந்த ஏழுமலைகள், ஆதிசேஷ வடிவில் இருப்பதால் “சேஷாசலம்” எனப்படுகிறது.
அம்மலை வேதங்களால் நிறைந்திருப்பதால் “வேதாசலம்” எனப்படுகிறது.
அம்மலை கருடனால் பூலோகத்துக்குக் கொண்டு வரப்பட்டதால் “கருடாசலம்” என்றும் அழைக்கபபடுகிறது.
அம்மலையில் விருஷாபாசுரனை அழித்து அவனுக்கு மோட்சம் அளித்ததால் “விருஷபத்ரி” என்றும் அழைக்கப்படுகிறது.
அஞ்சனாதேவி தவம் செய்து அனுமனைக் குமரனாகப் பெற்றதால் “அஞ்சனாத்ரி” என்றும் சொல்லப்படுகிறது.
வாயுபகவானைத் தூண்டி ஆனந்த பர்வதத்தை இங்கு கொண்டு வந்ததால் “ஆனந்தாத்ரி” என்றும் சொல்லப்படுகிறது.
அனைத்துப் பாவங்களையும் தீர்க்கும் புண்ணியத் தலமாகக் கருதப்படுவதால் “வெங்கடாத்ரி” என்றும் அழைக்கப்படுகிறது.
- தேனி. பொன். கணேஷ்.
*****
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.