சிவபெருமானை தியானித்து தண்ணீருடன் சேர்த்துக் குழைத்து மூன்று கோடுகளாகத் திருநீற்றை இட்டுக் கொள்ளல் வேண்டும். இதற்கு திரிபுண்டரம் என்று பெயர். மூன்று வகைப் பாவங்களைப் போக்கும் திருநீற்றின் மூன்று கோடுகள் சிறப்புக்குரியவை.
முதல் கோடு
அகாரம், கார்ஹபத்யம், ரிக்வேதம், பூலோகம், ரஜோகுணம், ஆத்மா, க்ரியாசக்தி, அதிகாலை மந்திரத்தின் தேவதை மகாதேவன் ஆகியவை அடங்கியது.
இரண்டாவது கோடு
உகாரம், தட்சிணஅக்னி, ஆகாயம், யஜுர்வேதம், சத்வகுணம், பகல்நேர மந்திரதேவதை இச்சாசக்தி, அந்தராத்மா, மகேஸ்வரன் ஆகியோர் இதில் உள்ளனர்.
மூன்றாவது கோடு
மகாரம், ஆலஹனீயம், பரமாத்மா, தமோகுணம், சுவர்க்கம், ஞானசக்தி, ஸாமவேதம், மாலைநேர மந்திர தேவதை, சிவன் ஆகியோர் இதில் உள்ளனர்.
சிவபெருமானை நினைத்து, திருநீற்றை அணிவதே மாஹேஸ்வர விரதம் எனப்படும். இந்த விரதம் எல்லா பாவங்களையும் நீராக்கும்; மோட்சம் தரும்; பயம் போக்கும்.