எட்டு உறுப்புகள் வணக்கம் (அஷ்டாங்க நமஸ்காரம்)
இந்து சமய வழிபாட்டில் ஆண்களுக்கு உரித்தான இறை வணக்கமாகும். இம்முறைப்படி ஆணின் எட்டு உடற்பாகங்களும் தரையில் படும்படியாக இறைவனை வணங்குகிறார்கள். தலை, முகம், இரண்டு தோள்பட்டைகள், உடல், இரண்டு முழங்கால்கள் மற்றும் பாத நுனி ஆகியவை அந்த உடல் பாகங்களாகும்.
ஐந்து உறுப்புகள் வணக்கம் (பஞ்சாங்க நமஸ்காரம்)
இந்து சமய வழிபாட்டில் பெண்களுக்கு உரித்தான இறை வணக்கமாகும். இம்முறையில் பெண்கள் தங்களது ஐந்து உடல்பாகங்களை பூமியில் படும்படி வணங்குதலாகும். தலை, இரண்டு முழங்கால்கள் மற்றும் இரண்டு பாதநுனிகள் என்பன அந்த உடல் பாகங்களாகும்.