சைவ சித்தாந்தம் பதி, பசு, பாசம் என்று முப்பொருளைப் பற்றி கூறுகிறது.
பசுவாகிய உயிர் பதியாகிய இறைவனை அடைய 36 தத்துவங்களை (கருவிகள்) இறைவன் படைத்துள்ளார். அவை;
சிவ தத்துவங்கள் ஐந்து
1. நாதம், 2. விந்து, 3. சாதக்கியம், 4. ஈசுரம், 5. சுத்தவித்தை
மற்ற 31 தத்துவங்கள் பஞ்ச கோசங்களில் ஐந்து உடல்களில் உள்ளன. அவை;
அ) காரண உடல்
6. மாயை
ஆ) கஞ்சுக உடல்
7. காலம், 8. நியதி, 9. கலை, 10. வித்தை, 11. அராகம், 12. புருடன்
இ) குண உடல்
13. சித்தம்
ஈ) சூக்கும உடல்
14. புத்தி, 15. அகங்காரம், 16. மனம், 17.,ஓசை, 18. ஊறு, 19.,ஒளி, 20.,சுவை, 21. நாற்றம் (தன்மாத்திரைகள்)
உ) அன்னமய உடல்
22. செவி, 23. மெய், 24. கண், 25. நாக்கு, 26. மூக்கு (அறிவுக் கருவிகள்)
27. வாய், 28. கால், 29. கை, 30.,கருவாய், 31.,எருவாய் (செயல் கருவிகள்)
32. வான், 33.,வளி, 34.,தீ, 35.,நீர், 36.,மண் (ஐம்பூதங்கள்).