இந்து சிந்தனையின் துவைதத்தின் முன்னோடியான மத்துவரால் நிறுவப்பட்ட எட்டு மடங்கள் இருக்கின்றன. இம்மடங்கள் ஒவ்வொன்றிற்கும், மத்துவர் தனது நேரடிச் சீடர்களில் ஒருவரைத் தலைவராக நியமித்தார்.
துவைதத் தத்துவத்தை பரப்புவதற்கு ஈடுபட்டு வரும் இம்மடங்கள் புகழ்பெற்ற உடுப்பி கிருட்டிணன் கோயிலை பரியாயம் என்ற முறையிலான சுழற்சி திட்டத்தின் மூலம் நிர்வகிக்கின்றனர்.
கிராமங்களின் பெயரைக் கொண்டு அமைந்த இம்மடங்கள் கர்நாடக மாநிலத்திலுள்ள கோயில் நகரமான உடுப்பியில் அமைந்துள்ளன. இந்த எட்டு மடங்களின் பெயர்கள்,
1. பெஜாவர் மடம்
2. பலிமார் மடம்
3. அடமாறு மடம்
4. புத்திகே மடம்
5. சோதே மடம்
6. காணியூரு மடம்
7. சிறூர் மடம்
8. கிட்டிணாபுரம் மடம்