பகவத் கீதை உள்ளிட்ட அனைத்து இந்து தர்ம நூல்கள் தவ முறைகளை மூன்று வகையாகப் பகுத்துக் காட்டுகின்றன.
1. தூய நிலையிலான தவமுறை (சத்வம்)
2. ஆசை அல்லது தற்பெருமை நிலையிலான தவமுறை (ரஜஸ்)
3. அறியாமை மற்றும் மூட நிலையிலான தவமுறை (தமஸ்)
இவற்றுள் சத்வ தவமுறை தான் ஊக்குவிக்கப்படுகின்றது. சத்வ தவ முறையைக் கடைப்பிடிப்பவர் இறைவனின் அருளைப் பெறுவர். சத்வ தவ முறையை உடல், வாக்கு, மனம் என மூன்றாகப் பிரிக்கலாம். அவை;
அ) உடல்
1. தினமும் தவறாமல் தெய்வங்களை வழிபட வேண்டும்.
2. பெற்றோர், குரு மற்றும் சான்றோர்களை மதித்துப் போற்ற வேண்டும்.
3. உடல் தூய்மையைப் பேண வேண்டும்.
4. எளிமையான வாழ்க்கையை வாழப் பழகிக் கொள்ளவேண்டும்.
5. தன்னடக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.
6. மற்றவர்களுக்குக் கேடு விளைவிக்கும் செயல்களைத் தவிர்க்க வேண்டும்.
ஆ) வாக்கு
1. பொய்யானவற்றைத் தவிர்த்து, உண்மையைப் பேச வேண்டும்.
2, கடுமையான சொற்களைத் தவிர்த்து, இனிமையாகப் பேச வேண்டும்.
3. மற்றவர்களுக்கு நன்மை விளைவிக்கும் விஷயங்களைப் பேச வேண்டும்.
4. நல்லவர்களை நோகடிக்காமல் பேச வேண்டும்.
5. வேதங்கள் கூறும் உண்மைகளை மற்றவர்களுக்குக் கற்பிக்க வேண்டும்.
இ) மனம்
1. இருப்பதைக் கொண்டு மனதில் திருப்தி கொண்டிருக்க வேண்டும்.
2. மனத்தைக் கட்டுப்படுத்தப் பழக வேண்டும்.
3. தேவையற்ற சிந்தனைகளைத் தவிர்த்து, மனத்தில் மௌனத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.
4. எண்ணங்கள் தூய்மையானதாக இருக்க வேண்டும்.