பேட்டை துள்ளுதல்!
சபரிமலைக்குச் செல்லும் பக்தர்கள் எருமேலி எனுமிடத்தில் “சுவாமி திந்தக்க தோம் ஐயப்ப திந்தக்க தோம்” என்று உற்சாகமாகச் சொல்லியபடி நடனமாடிக் குதிப்பது வழக்கமாக உள்ளது. இது ஏன் தெரியுமா?
பேட்டை துள்ளுதல் எனப்படும் இவ்வழக்கத்தின் உட்பொருள் இதுதான்.
வனத்திற்குள் செல்லும் வேடர்கள் கொடிய மிருகங்களைக் கொன்று அதனைச் சுமந்தபடி ஆனந்தமாக ஆடி வருவது வழக்கம்.
அதே போல் நம் உள்ளம் என்னும் வனத்துக்குள் இருக்கும் கோபம், மோகம், மதம் போன்றவற்றை வதைத்துவிட்டு அய்யப்பனின் பெருமையை உணர்ந்து கொண்டு உண்மையான மகிழ்ச்சி அடைந்தோம் என்பதை உணர்ந்து கொண்டதன் அடையாளமாக இந்த வழக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது.
- கணேஷ் அரவிந்த், திருநெல்வேலி.
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.