கோயில் நுழைவு வாயிலருகே இருபுறமும் துவாரபாலகர்கள் இருப்பதை அறிவோம். துவாரபாலகர்கள் ஏன் அங்கிருக்கிறார்கள் என்பதை அறிவீர்களா?
துவாரபாலகர்கள் என்பதை துவாரம் + பாலகர்கள் என்று பிரிக்கலாம். துவாரம் என்றால் நுழைகின்ற இடம், பாலகர்கள் என்றால் காப்பவர்கள் என்று பொருள். இதனை நாம் “வாயில் காப்போன்” என்றே எடுத்துக் கொள்ளலாம்.
இரு துவாரபாலகர்களில் ஒருவர் ஆள்காட்டி விரலைக் காட்டி நிற்பார், மற்றொருவர் கையை விரித்துக் காட்டியபடி இருப்பார்.
ஆள்காட்டி விரலைக் காட்டி நிற்பதற்கான பொருள்:
உள்ளே வழிபடச் செல்வோருக்கு, வாசலிலேயே அவர் கடவுள் ஒருவரே என்கிற தத்துவத்தை உணர்த்துகிறார்.
கையை விரித்துக் காட்டியபடி இருப்பதற்கான பொருள்:
கடவுள் ஒன்றைத் தவிர, வேறொன்றுமில்லை என்று உணர்த்துகிறார்.