நீ கிருஷ்ணனைக் கர்ப்பத்தில் அனுபவித்தால், உன்னைத் தேவகிக்குப் பிடிக்கும் !
நீ கிருஷ்ணனைப் பிள்ளையாய் அனுபவித்தால், உன்னை வசுதேவருக்குப் பிடிக்கும் !
நீ கிருஷ்ணனை குழந்தையாய் அனுபவித்தால், உன்னை யசோதைக்குப் பிடிக்கும் !
நீ கிருஷ்ணனை மாட்டுக்காரனாக அனுபவித்தால், உன்னை நந்தகோபருக்குப் பிடிக்கும் !
நீ கிருஷ்ணனை காதலனாய் அனுபவித்தால், உன்னைக் கோபிகைகளுக்குப் பிடிக்கும் !
நீ கிருஷ்ணனை தகப்பனாக அனுபவித்தால், உன்னை ருக்மிணிக்குப் பிடிக்கும் !
நீ கிருஷ்ணனை பார்த்தசாரதியாய் அனுபவித்தால், உன்னை அர்ச்சுனனுக்குப் பிடிக்கும் !
நீ கிருஷ்ணனை நண்பனாய் அனுபவித்தால், உன்னை உத்தவருக்குப் பிடிக்கும் !
நீ கிருஷ்ணனை தூதுவனாய் அனுபவித்தால், உன்னைப் பாண்டவர்களுக்குப் பிடிக்கும் !
நீ கிருஷ்ணனை தெய்வமாய் அனுபவித்தால், உன்னைப் பீஷ்மருக்குப் பிடிக்கும் !
நீ கிருஷ்ணனை கீதாசார்யனாக அனுபவித்தால், உன்னைச் சஞ்சயனுக்குப் பிடிக்கும் !
நீ கிருஷ்ணனை ஆபத்பாந்தவனாக அனுபவித்தால், உன்னை திரௌபதிக்குப் பிடிக்கும் !
நீ கிருஷ்ணனை ரங்கனாய் அனுபவித்தால், உன்னை ஆண்டாளுக்குப் பிடிக்கும் !
நீ கிருஷ்ணனை நாராயணனாய் அனுபவித்தால், உன்னை ராமானுஜருக்குப் பிடிக்கும் !
நீ கிருஷ்ணனை குருவாயூரப்பனாக அனுபவித்தால், உன்னை மஞ்சுளாவுக்குப் பிடிக்கும் !
நீ கிருஷ்ணனை பாண்டுரங்கனாக அனுபவித்தால், உன்னை புண்டலீகனுக்குப் பிடிக்கும் !
நீ கிருஷ்ணனை உடுப்பி கிருஷ்ணனாக அனுபவித்தால், உன்னைக் கனகதாஸருக்குப் பிடிக்கும் !
நீ கிருஷ்ணனை கிரிதாரியாக அனுபவித்தால், உன்னை மீராவுக்குப் பிடிக்கும் !
நீ கிருஷ்ணனை ஸ்ரீ நாத்ஜீயாக அனுபவித்தால், உன்னை வல்லபாச்சார்யருக்குப் பிடிக்கும் !
நீ கிருஷ்ணனை பூரி ஜகந்நாதனாக அனுபவித்தால், உன்னை கிருஷ்ண சைதன்யருக்குப் பிடிக்கும் !
நீ கிருஷ்ணனை ராஸநாயகனாக அனுபவித்தால், உன்னை ஜயதேவருக்குப் பிடிக்கும் !
நீ கிருஷ்ணனை அனந்த பத்மநாபனாக அனுபவித்தால், உன்னை மஹாராஜா சுவாதித் திருநாளுக்குப் பிடிக்கும் !
நீ கிருஷ்ணனை ஸ்ரீமத் பாகவதமாக அனுபவித்தால், உன்னை சுகப்ரம்மரிஷிக்குப் பிடிக்கும் !
நீ கிருஷ்ணனை நாமஜபமாக அனுபவித்தால், உன்னை ஹரிதாஸ்யவனுக்குப் பிடிக்கும் !
நீ கிருஷ்ணனை ராதிகாதாஸனாக அனுபவித்தால், உன்னைக் கிருஷ்ணனுக்குப் பிடிக்கும் !
நீ கிருஷ்ணனிடம் ப்ரேமையில் உன்னையே கொடுத்து, அவன் இஷ்டப்படி வாழ்ந்தால், உன்னை ராதிகாவுக்குப் பிடிக்கும் !
உன்னிடத்தில் இத்தனைபேர் ப்ரியம் வைக்கக் காத்திருக்க, நீ ஏன் மனிதர்களின பொய்யான அன்பிற்காக ஏங்குகிறாய்?
கிருஷ்ணனிடம் சரணாகதி ஆகிவிடு. உன்னை கிருஷ்ணனுக்குப் பிடிக்கும். உ னக்கு வேண்டியது அனைத்தும் கிடைக்கும்.