சைவ சமயத் தத்துவங்கள்

மாயையின் செயலாகக் கருதப்படும் தத்துவம் என்பதற்கு “மூலமாக உள்ள பொருள்” என்று பொருள்.தனு கரண புவன் போகங்கள் மாயையிலிருந்து தோன்றும் போது முதலில் தத்துவங்களாகத் தோன்றுகின்றன.
சைவ சமயத்தில் சுத்த மாயையின் செயலாக ஐந்து தத்துவங்களும், அசுத்த மாயையின் செயலாக ஏழு தத்துவங்களும் உள்ளன.
சுத்த மாயை தத்துவங்கள் (5)
1. நாதம்
2. விந்து
3. சாதாக்கியம்
4. ஈசுவரம்
5. சுத்தவித்தை
இது சிவதத்துவங்கள் என்றும் அழைக்கப்படுகிறது.
அசுத்த மாயை தத்துவங்கள் (7)
1. காலம்
2. நியதி
3. கலை
4. வித்தை
5. அராகம்
6. புருடன்
7. மாயை
இது வித்தியாதத்துவங்கள் என்றும் அழைக்கப்படுகிறது.
பிரகிருதிமாயா தத்துவங்கள் (24)
வித்தியாதத்துவங்களில் ஒன்றான கலை எனும் தத்துவத்திலிருந்து ஐந்து பிரிவுகளில், இருபத்து நான்கு தத்துவங்களைக் கொண்டு பிரகிருதிமாயா தத்துவங்கள் எனப்படுகிறது. இது ஆன்ம தத்துவம் என்றும் அழைக்கப்படுகிறது.
I அந்தக்கரணம் (4)
1. மனம்
2. புத்தி
3. அகங்காரம்
4. சித்தம்
II கன்மேந்திரியம் (5)
1. வாய் (வாக்கு)
2. கால் (பாதம்)
3. கை (பாணி)
4. எருவாய் (பாயு)
5. கருவாஉ (உபத்தம்)
III ஞானேந்திரியம் (5)
1. செவி (சுரோத்திரம்)
2. கண் (சட்சு)
3. நாக்கு (சிங்குவை, தாலு)
4. மூக்கு (ஆக்கிராணம்)
5. தோல் (துவக்கு)
IV தன்மாத்திரை (5)
1. நாற்றம் (கந்தம்)
2. சுவை (இரதம்)
3. ஒளி (ரூபம்)
4. ஊறு (ஸ்பரிசம்)
5. ஓசை (சப்தம்)
V பூதங்கள் (5)
1. நிலம் (பிருதுவி)
2. நீர் (அப்பு)
3. தீ (தேயு)
4. காற்று (வாயு)
5. வெளி (ஆகாயம்)
- கலாநிதி க. கணேசலிங்கம் எழுதிய “சைவ சித்தாந்த வினா விடை” நூலிலிருந்து
- தேனி. பொன். கணேஷ்
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.