வீட்டில் தினமும் சாம்பிராணி தூபம் போடுவது மிகவும் நல்லது. எந்தக் கிழமையில் எந்தச் சாம்பிராணி தூபம் போட்டால், என்ன பலன் கிடைக்கும்?
ஞாயிறு - ஆத்ம பலம், செல்வாக்கு, புகழ் உயரும், ஈஸ்வர அருள் கிடைக்கும்.
திங்கள் - தேக, மன ஆரோக்கியம், மன அமைதி, அம்பாள் அருள் கிடைக்கும்.
செவ்வாய் - எதிரிகளின் போட்டி, பொறாமை மற்றும் தீய - எதிர்மறை எண்ணங்களின் மூலம் உண்டான திருஷ்டி கழிதல், எதிரிகளின் தொல்லை நீங்குதல், முருகனின் அருள், கடன் பிரச்சனை தீரும்.
புதன் - நம்பிக்கை துரோகம், சூழ்ச்சிகளில் இருந்து தப்புதல், நல்ல சிந்தனை வளர்ச்சி, வியாபார வெற்றி, சுதர்சனரின் அருள் கிடைக்கும்.
வியாழன் - அனைத்துச் சுபப் பலன்கள், பெரியோர்கள், குருமார்கள் ஆசி கிடைக்கும், சித்தர்களின் மனம் குளிரும், முன்னேற்றங்கள் தொடரும்.
வெள்ளி - செல்வம் சேரும், அனைத்துச் செயல்களிலும் வெற்றி, லட்சுமியின் அருள் கிடைக்கும்.
சனி - சோம்பல் நீங்குதல், துன்பங்கள் அனைத்தும் நீங்கும், சனி பகவான், பைரவர் அருள் கிடைக்கும்.