பிரம்ம முகூர்த்தம் என்பது அதிகாலை 4.24 மணி முதல் 5.12 மணி வரையில் உள்ள காலம் ஆகும். பிரம்மனுடைய சக்தி தேவியான சரஸ்வதி தேவி விழித்துச் செயற்படும் நேரம் பிரம்ம முகூர்த்தம் என்பதும் தொன்ம நம்பிக்கை.
“சூரியோதயே சாஸ்தமயே ஸாயினம் விமுஞ்சதி ஸ்ரீரபி ஸக்ரபாணிநம்!”
என்கிறது சாஸ்திரம்.
மேற்கண்ட சம்ஸ்கிருத வார்த்தையின் பொருள் என்னவெனில்,
சூரியன் உதயமாகும் நேரத்தில் தூங்குபவன், இந்திரனைப் போல் செல்வச் செழிப்பு கொண்டவனாக இருந்தாலும், அவனை விட்டு திருமகள் விலகி விடுவாள். அதே சமயத்தில், பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து செயற்படும் போது, மன நிலையானது ஒரு நிலைப்படுகின்றது. அதற்கு ஏற்ற காலமாக இது விளங்குகின்றது. அதிகாலையில் சூரிய வெப்பம் கிடையாது. சந்திரனுடைய குளுமையும் கிடையாது. இவை இரண்டுக்கும் மத்தியில் நிலவுவதுதான் பிரம்ம முகூர்த்தம்.
ஒவ்விரு நாளிலும் பிரம்ம முகூர்த்தம் தவிர்த்து, வேறு என்ன முகூர்த்தங்களெல்லாம் இருக்கின்றன? என்று உங்களுக்குத் தெரியுமா?
1. ருத்ர முகூர்த்தம் - முற்பகல் 6.00 மணி முதல் 6.48 மணி வரை
2. ஆஹி முகூர்த்தம் - முற்பகல் 6.48 மணி முதல் 7.36 மணி வரை
3. மித்ர முகூர்த்தம் - முற்பகல் 7.36 மணி முதல் 8.24 மணி வரை
4. பித்ரு முகூர்த்தம் - முற்பகல் 8.24 மணி முதல் 9.12 மணி வரை
5. வசு முகூர்த்தம் - முற்பகல் 9.12 மணி முதல் 10.00 மணி வரை
6. வராஹ முகூர்த்தம - முற்பகல் 10.00 மணி முதல் 10.48 மணி வரை
7. விச்வேதேவா முகூர்த்தம் - முற்பகல் 10.48 மணி முதல் 11.36 மணி வரை
8. விதி முகூர்த்தம் - முற்பகல் 11.36 மணி முதல் மதியம் 12.24 மணி வரை
9. சுதாமுகீ முகூர்த்தம் - பிற்பகல் 12.24 மணி முதல் 1.12 மணி வரை
10. புருஹூத முகூர்த்தம் - பிற்பகல் 1.12 மணி முதல் 2.00 மணி வரை
11. வாஹிநீ முகூர்த்தம் - பிற்பகல் 2.00 மணி முதல் 2.48 மணி வரை
12. நக்தனகரா முகூர்த்தம் - பிற்பகல் 2.48 மணி முதல் 3.36 மணி வரை
13. வருண முகூர்த்தம் - பிற்பகல் 3.36 மணி முதல் 4.24 மணி வரை
14. அர்யமன் முகூர்த்தம் - பிற்பகல் 4.24 மணி முதல் 5.12 மணி வரை
15. பக முகூர்த்தம் - பிற்பகல் 5.12 மணி முதல் 6.00 மணி வரை
16. கிரீச முகூர்த்தம் - பிற்பகல் 6.00 மணி முதல் 6.48 மணி வரை
17. அஜபாத முகூர்த்தம் - பிற்பகல் 6.48 மணி முதல் 7.36 மணி வரை
18. அஹிர்புத்ன்ய முகூர்த்தம் - பிற்பகல் 7.36 மணி முதல் 8.24 மணி வரை
19. புஷ்ய முகூர்த்தம் - பிற்பகல் 8.24 மணி முதல் 9.12 மணி வரை
20. அச்விநீ முகூர்த்தம் - பிற்பகல் 9.12 மணி முதல் 10.00 மணி வரை
21. யம முகூர்த்தம் - பிற்பகல் 10.00 மணி முதல் 10.48 மணி வரை
22. அக்னி முகூர்த்தம் - பிற்பகல் 10.48 மணி முதல் 11.36 மணி வரை
23. விதாத்ரு முகூர்ர்த்தம் - பிற்பகல்11.36 மணி முதல் முற்பகல் 12.24 மணி வரை
24. கண்ட முகூர்த்தம் - முற்பகல் 12.24 மணி முதல் 1.12 மணி வரை
25. அதிதி முகூர்த்தம் - முற்பகல் 1.12 மணி முதல் 2.00 மணி வரை
26. ஜீவ / அம்ருத முகூர்த்தம் - முற்பகல் 2.00 மணி முதல் 2.48 மணி வரை
27. விஷ்ணு முகூர்த்தம் - முற்பகல் 2.48 மணி முதல் 3.36 மணி வரை
28. த்யுமத்கத்யுதி முகூர்த்தம் - முற்பகல் 3.36 மணி முதல் 4.24 மணி வரை
29. பிரம்ம முகூர்த்தம் - முற்பகல் 4.24 மணி முதல் 5.12 மணி வரை
30. சமுத்ரம் முகூர்ர்த்தம் - முற்பகல் 5.12 மணி முதல் 6.00 மணி வரை
பதினெண் புராணங்களில் ஒன்றான சிவபுராணத்தில் ருத்ரசம்ஹிதையின் சிருஷ்டி காண்டம் 11 மற்றும் 13-வது அத்தியாயங்களில் பிரம்ம முகூர்த்தத்தின் சிறப்பைப் பற்றிச் சிறப்பாகச் சொல்லப்பட்டுள்ளது.