பைந்துவராடை
மு. சு. முத்துக்கமலம்
இந்து சமயத்தைச் சேர்ந்த சைவ, வைணவத் துறவிகள் (சன்னியாசிகள்), காவி அல்லது வெளிர் நிற சிகப்பு ஆடைகளையே அணிவர். சமூகம் / வாழ்க்கையின் பற்றுகளிலிருந்து விலகியுள்ளோம் என்பதை அனைவருக்கும் தெரிவிக்கும் அடையாளமாகவே இது அமைந்திருக்கிறது. தமிழில் துவர் என்றால் சிவப்பு என்றும் பொருளுண்டு. பைந்துவர் எனில் இளஞ்சிவப்பு / காவி என்றுப் பொருள்படும். ஆகவே இந்துச் சமயத் துறவிகள் அணியும் இளஞ்சிவப்பு ஆடைகள் பைந்துவராடை எனப்படுகிறது. இதை சமசுகிருதத்தில் காஷாய வஸ்த்ரம் என்கின்றனர்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.