நிர்மால்ய தோசம்
மு. சு. முத்துக்கமலம்
நிர்மால்ய (எச்சில்) தோசம் ஏற்படும் என்ற காரணத்தால், சைவ ஆகமத்தின் படி, சிவன் கோயில்களில் சிவபெருமானுக்குப் படைத்தப் படையலை, பூசை முடிந்த பின்னர் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்குவதில்லை. ஆனால், பாஞ்சராத்திர ஆகமத்தின் படி, பெருமாள் கோயில்களில் பெருமாளுக்குப் படைக்கப்படும் படையல்களுக்கு, நிர்மால்ய தோசம் ஏற்படாது என வேதாந்தத் தேசிகர் என்பவர் கூறியுள்ளதால், பெருமாளுக்குப் படைத்த படையல்கள், அங்கு வரும் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படுகிறது.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.