இந்து சமயத்தைச் சேர்ந்த ஒரு ஆண், தனது 60 வயதில், தன் மனைவியுடன் சேர்ந்து மீண்டும் திருமணம் செய்து கொள்ளும் வழக்கம் உள்ளது. இதற்கு, பல ஆண்டுகள் தம்பதிகளாகச் சேர்ந்து வாழ்ந்து, தன் பிள்ளைகள், பேரன், பேத்தி, கொள்ளுப் பேரன் எனக் கண்டிருப்பார்கள். அவர்களிடம் ஆசி வாங்கும் போது, நம் தலைமுறையும் அதே போன்று செழிக்கும் என்கிற நம்பிக்கையே முழுக் காரணமாக இருக்கிறது.
ஆனால், இந்து சமயத்தில் ஆண்மகன் ஒருவர் திருமணத்திற்குப் பிறகு, திருமணம் போன்று பத்து விழாக்களைச் செய்திட வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. அவை;
1. 55 வயது ஆரம்பமாகும் போது பீம சாந்தி வைபவம்
2. 60 வயது ஆரம்பமாகும் போது உக்ரரத சாந்தி வைபவம்
3. 61 வயது ஆரம்பமாகும் போது ஷஷ்டிஅப்த பூர்த்தி சாந்தி வைபவம்
4. 70 வயது ஆரம்பமாகும் போது பீமரத சாந்தி வைபவம்
5. 72 வயது ஆரம்பமாகும் போது ரத சாந்தி வைபவம்
6. 78 வயதில் ஆரம்பமாகும் போது விஜய சாந்தி வைபவம்
7. 80 வருஷம் 8 மாதம் முடிந்து உத்தராயண சுக்லபக்ஷம் நல்ல நாளில் - சதாபிஷேகம் வைபவம்
8. பௌத்ரனுக்கு புத்ரன் பிறந்தால் - ப்ரபௌத்ர ஜனன சாந்தி (கனகாபிஷேகம்) வைபவம்
9. 85 முதல் 90 வயதுக்குள் - ம்ருத்யுஞ்ஜய சாந்தி வைபவம்
10. 100 வயதில் சுபதினத்தில் கொண்டாடப்படுவது பூர்ணாபிஷேகம் வைபவம்.
மேற்காணும் விழாக்களைச் செய்ய விரும்புபவர்கள், ஆண்மகனின் தமிழ் பிறந்த தேதி அல்லது பிறந்த நட்சத்திரத்தில் செய்ய வேண்டும் என்கின்றனர்.