* சூட்சும லிங்கமாகும். சதுர அடிப்பாகம் - பிரமனைக் (படைத்தல்) குறிக்கும்.
• அதன்மேல் எண்கோணம் - விஷ்ணுவைக் (காத்தல்) குறிக்கும்.
• மேல் உருண்டு நீண்ட பாகம் - உருத்திரனைக் (அழித்தல்) குறிக்கும்.
• அசுரரை அகற்றவும், தேவரை வரவழைக்கவும், ஆலயத்தை இரட்சிக்கவும், பக்தர்களை காக்கவுமே - கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்படுகிறது.
• கொடி மரத்தின் மேல்பாகத்தில் அமைக்கப்பட்டிருப்பது - அந்தந்த மூர்த்தியின் வாகனம். எ.கா. விநாயகர் - மூஷிகம், சாஸ்தா - குதிரை.
• மூலலிங்கத்துக்கு செய்யும் அனைத்து மரியாதைகளும் - கொடிமரத்திற்கு உண்டு.
• கொடிமரத்திற்கு உகந்த மரங்கள் - முகில், சந்தனம், தேவதரு, செண்பகம், வில்வம்.
• கொடிமரத்திற்கு மத்திமமான மரங்கள் - மா, பலா.
• கொடிமரத்திற்கு அதமமான மரங்கள் - கமுகு, தென்னை, பனை.
• கொடிமரத்தில் 36 கணுக்கள் இருப்பின் சிறப்பு. நீளம் ஆலய அளவிற்கு ஏற்றவாறு இருத்தல் நலம்.
• கொடிமரமீன் தத்துவம் - யோகநிலைக்கு ஒப்பிடப்படுகிறது.
• கொடிமரத்தை யோகியின் முதுகெலும்பு (அ) மேருதண்டத்திற்கு ஒப்பிடுவர்.