இந்துக்கள் பிறப்பு, இறப்பு, வாழும் காலங்களில் செய்யும் சடங்குகள் - கிரியைகள் எனப்படும். இதனைத் தொல்காப்பியர் ‘கரணம்” என்பார். இவை சோடச சம்ஸ்காரங்கள் எனப்படும்.
1. பும்ஸவனம்
பெண் கருவுற்ற 3 மாதத்தில் கர்ப்பத்திற்கு இடையூறு நேரா வண்ணம் இறைவனைப் பிரார்த்தித்தல்.
2. சீமந்தம்
கருக்கொண்ட 4 அல்லது 8 ஆம் மாதத்தில் குழந்தையை இரட்சிக்கத் தேவர்களை வேண்டுவது (வளைகாப்பிடுதல்)
3. ஜாதகர்மம்
குழந்தை பிறந்தவுடன் செய்ய வேண்டிய கிரியை. சாமர்த்தியம், ஆயுள், செல்வம் பெற வேண்டுதல்.
4. நாமகரணம்
பெயர் சூட்டுதல்
5. புண்ணியாவாசனம்
புண்ணியாவாசனம் செய்த புனித நீரை மாவிலையின் மூலம் வீடு, மனிதர் மீது தெளித்தல்.
6. நிஷ்க்ராமனம்
குழந்தை பிறந்த 4 மாதங்கழித்து முதன் முதலில் வெளியேக் கொண்டு செல்லுதல்
7. அன்னபிரசன்னம்
6 வது மாதம் சோறு, தயிர், நெய், தேன கலந்து கடவுளை பிரார்த்தித்துக் குழந்தைகளுக்குக் கொடுத்தல்
8. வித்யாரம்பம்
குழந்தைகளுக்கு 5 வயதானதும் முதன்முதலில் கல்வி பயில வைப்பது. கணபதி, குரு, சரஸ்வதியை வணங்கி ‘அரி அரி” என எழுதச் சொல்லுவது.
9. கர்ணபூஷணம்
தோடு முதலிய தொங்கஅ செய்யவும், தங்கம் வழியே பாயும நீர் குழந்தைக்கு ஆரோக்கியம் தருவதாலும், தீய விஷயங்களை துளை வழியே வெளியேச் செலுத்துவதுமே இதன் நோக்கமாகும்.
10. சௌனம் (குடுமி வைத்தல்)
குழந்தைக்கு முதன்முதலாக மொட்டையடித்தல்.
11. உபநயனம்
குழந்தைக்கு 7 வயதானதும் காயத்ரி மந்திரம் உபதேசித்து பூணூல் அணிதல். உபநயனம் செய்வோருக்குத் தீட்சை செய்ய வேண்டும். பிறப்பு 2 என இந்துமதம் கூறுகிறது. அது பூணூல் அணிதல் முன் மற்றும் அணிந்த பின்.
12. குருகுலவாசம்
மாணவர், குருவிற்கு பணிவிடை செய்து கல்வி கற்றல்
13. திருமணம்
குருகுலம் முடிந்த பின் குருவின் அனுமதி பெற்று நடைபெறுவது.
14. குறிக்கோள் பகர்தல் (சங்கற்பம்)
காலம், இடம், செயலை விளக்கி பிரார்த்திக்க வேண்டும்.
15. புனிதநீர் சுத்தி (புண்ணியாவாசனம்)
உடம்பு, உள்ளம் சுத்தி செய்யும் பொருட்டு புனித நீரை மணமக்களுக்குத் தெளித்தல். (புனித நீர் உருவாக்கும் முறை: அரிசியைக் கீழே இட்டு தர்ப்பை இட்டு மும்மூர்த்திகளைத் தியானித்து ஐந்தெழுத்துகளை எழுதி, பால், தயிர், நெய், கோமியம், கோசனம் என்ற 5 பொருட்களை சேர்த்து ‘பஞ்சகவ்யம்” ஆக்க வேண்டும்)
16. காப்பு கட்டுதல் (ரக்சாபந்தனம்)
திருமணம் நடக்கையில் இடையூறு நேரா வண்ணம் ஆண்களுக்கு வலது கையிலும், பெண்ணுக்கு இடக்கையிலும் விநாயகரை வணங்கி மஞ்சள் கட்டுதல்.
17. முளையிடுதல் (அங்குரார்ப்பணம்)
உழவைச் சிறப்பிக்க சந்ததி விருத்தியின் பொருட்டு விவாகக் காலத்தில் செந்நெல், எள், வெண்கடுகு முதலிய தானியத்தை 12 மண்பாலிகைகளில் இட்டு வளர்த்தல்.
18. குடவழிபாடு (கும்பபூஜை)
கும்பநீர் மூலம் கடவுளை வழிபட 18.குடவழிபாடு (கும்பபூஜை) இது அவசியம்.
19. எரியோம்பல் (அக்கினிகாரியம்)
தூய மணலில் உமி விரித்து ஆல், அரசு, மா, முதலிய குச்சிகளை வைத்துத் தீ மூட்டி நெல், நெய், பொரி, தானியமிட்டு தீயினை இறைவனாக வணங்குதல்.
20. வடிவ வழிபாடு (மூர்த்தி பூஜை)
இறைவனை ஒரு வடிவத்தில் எழுந்தருளச் செய்து வணங்குதல்.
21. தானம்
திருமண நாளன்று ஏழை, எளியோருக்கு பொருள் கொடுத்தல்
22. கைபிடித்துக் கொடுத்தல்
மணமகளின் தந்தை, மணமகனுக்குப் பெண்ணைக் கைபிடித்துச் கொடுத்தல்.
23. திருமங்கலநாண் பூட்டுதல்
ஆச்சாரியர் கொடுக்க மணமகளுக்கு மணமகன் சகோதரியின் உதவியோடு தாலி கட்டுதல்.
24. சஷ்டியப்த பூர்த்தி
60 ஆண்டுகள் பூர்த்தியானதும் ‘ருத்ராட்ச” மாங்கல்யம் கட்டி சிற்றின்ப வாழ்வு முடித்து ஆன்மீக வாழ்க்கை வாழ பெற்றோரிடத்து நன்றி செலுத்தும் பொருட்டு பிள்ளைகள் செய்வது
25. சதாபிஷேம்
80க்கு மேலுள்ளோர் 1000 பிறை கண்டோர் எனப்படுவர்.
26. அபரக்கிரியை
ஒருவர் இறந்த பின் அவர் ஆத்மா சாந்தியடைய பிள்ளைகள் செய்யும் கிரியை.
27. அந்தியேட்டி
இறந்தது முதல் தீயிலிடும் வரை செய்யும் கிரியைகள்.
28. அத்தி சஞ்சயனம்
எலும்பு (அ) சாம்பலைச் சேகரித்து, புனித நீரில் கரைத்தல்.
29. சிரார்த்தம்
இறந்த நாளன்றி, அமாவாசை, வருடப் பிறப்பு நாட்களில் இறந்தோருக்கு தீர்த்தமுள்ள இடம் (அ) கோவிலில் செய்யும் கிரியை.