இந்து சமயத்தில் உபகிரகங்கள் எனப்படுவது நவக்கிரகங்களின் புத்திரர்கள் ஆவர்.
அ) குளிகாதி நால்வர்
1. குளிகன் - சனியுனுடைய புத்திரர்
2. எமகண்டன் - குருவினுடைய புத்திரர்
3. அர்த்தப்பிரகரணன் - புதனுடைய புத்திரர்
4. காலன் - சூரியனுடைய புத்திரர்
ஆ) தூமாதி ஐவர்
5. தூமன் - செவ்வாயுடைய புத்திரர் - புகை சமுகத்தையொத்து வால் நட்சத்திரம் ஆகும்.
6. வியதீபாதன் - இராகுவுடைய புத்திரர் - கொள்ளிக்கட்டை நெருப்பைப் போல் காணப்படுவான்.
7. பரிவேடன் - சந்திரனுடைய புத்திரர் - சூரிய சந்தரர் பிம்ப அந்தரக்கதனுய் அவர்கள் உதிக்கும் போது, அவர்கள் மண்டலத்தைச் சுற்றிப் பலவித வர்ணங்களுடன் வட்ட வடிவாகக் காணப்படுவான்.
8. இந்திரத்தனுசு - சுக்கிரனுடைய புத்திரர் - பலவித வர்ணங்களுடன் அந்தியில் கிழக்கிலும், அதிகாலையில் மேற்கிலும் வில்லைப்போல உலகப் பிரசித்தமாகக் காணப்படுவான்.
9. தூமகேது - கேதுயுடைய புத்திரர் - ஓரோர் காலத்தில் வால் நட்சத்திரமாகக் காணப்படுவான்.