சைவ அகச்சமயங்கள் 6. அவையாவன;
1. பாடாணவாதம்
முக்தியிலும் ஆன்மா நீங்காது. கல்போல் கிடப்பதே முக்தி. ஆன்மா இறையிடம் கூடுவதில்லை.
2. பேதவாதம்
ஆன்மா மூன்று மலம் நீங்கபெறின் பெறுவானும், பேறுமாய் நிற்கும் அதுவே முக்தி.
3. சிவசமயவாதம்
உயிர் நீங்கப் பெறின் இறைவனின் எண்குணம் பெற்று, முதல்வனோடு அத்துவிதமாகும்.
4. சிவசங்கிரானந்தவாதம்
உப்பிலிட்டவை உப்பாவது போல ஆன்மா சிவமேயாகி, சிவகரணம் பெறும்.
5. ஈஸ்வர அவிகார வாதம்
குடத்தில் ஏற்றிய விளக்கு போல ஆன்மா உடம்பில் பிரகாசிக்கும். அது மலபரிபாகம், சந்நிதிபாதம், தேர்ந்த போது இறைவனடி அடையும்.
6. சிவாத்துவித சைவம்
பசு, பதி, பாசம் சித்தாந்த சைவத்தோடு ஒப்பக்கூறி மரத்தின் கொம்புகளும் மரமாவது போல அனைத்து ஸத்தே எனவும், ஆன்மாவிடமிருந்து அறியும் ஸத்து சிவமே எனவும் கூறும்.